சிசிலியா கொத்தலாவல 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
கைது செய்யப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோனினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள வைத்திய அறிக்கையினை பரிசீலித்ததன் பின்னர் அவரை இவ்வாறு விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபரை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதவான் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரை சிறைச்சாலையிலேயே வைக்க வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இதன் போது நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபரை தேசிய வைத்தியசாலைக்கு அனுமதித்ததன் பின்னர் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் சந்தேகநபரின் வைத்திய அறிக்கைய நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கோல்ட்ன் கீ வைப்பாளர்களின் 5 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்வதற்கு 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment