புரியாணி விஷமாகி, 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி - காத்தான்குடியில் சம்பவம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் இன்று 20 சனிக்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் தற்போது வரை அனுமதிக்ப்பட்டுள்ளதாகவும்,சுமார் 15 பேருக்கு மேல் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியாசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரவிக்கையில் .....
உணவு விஷமானதன் காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியாசாலைக்கு வரும் நோயாளிகளில் சிலர் தீவிர சிகிச்சை,அதி தீவிர கண்கானிப்புப் பிரிவிலும் பின்னர் நோயாளர் விடுதிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும்,சிலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும்,இதனால்ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர், சிறுமிகள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேற்படி உணவு விஷமானது தொடர்பில் தெரியவருவதாவது,
புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சாப்பாடு தயாரிக்கும் நிலையமொன்றில் நேற்று 19 வெள்ளிக்கிழமை பகல் சாப்பட்டிற்காக புரியாணி சோறு ,பார்சல்கள் பெறப்பட்டு அவற்றை சாப்பிட்டதாகவும் அதன் பின்னர் தலைசுற்று, வாந்தி மயக்கம் போன்ற நோய்கள் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் பாதிக்கப்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர தெரிவித்தார்.
Post a Comment