2002 பெப்ரவரி 27 - 3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 27....!!
2002 பிப்ரவரி 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் குஜராத்தில் நாடு முழுவதும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்த நாள்,
3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்,
பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல், முதியோர் என்றும் பாராமல் மொத்தமாக கருவறுக்கப்பட்ட நாள்,
கைசர் பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கதற கதற கற்பழித்து வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து அதன் மீது சூலாயுதத்தால் குத்தி குதறி அச்சிசுவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நாள்,
கிணற்றில் நூற்றுகணக்கான சிறுவர்களை கேஸ் வாயு மூலம் தீ வைத்து கொன்ற நாள்,
பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் ஒரே கடையில் தீ வைத்து கொளுத்தப்பட்ட நாள்,
அடைக்கலம் தேடி ஓடிய முஸ்லிம் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பது போல் கொடுத்து விட்டு சோறும் போட்டு கண்ணயர்ந்த நேரத்தில் திண்ட சோறு செரிப்பதற்கு முன் குடலை அறுத்த நாள்,
பள்ளிவாசலில் நுழைந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த நாள்,
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி நரவேட்டையாடப்பட்ட நாள்,
இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு நம்மையே அடையாளம் காட்டிய நாள், வாழ்வில் மறக்க முடியாத நாள்,
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டாலே அக்குடும்பம் பல மாதங்கள் சோகத்தில் மூழ்குவதை கண்டிருப்போம், 3 ஆயிரம் முஸ்லிம்களை பறிகொடுத்து விட்டு ஒரு சமுதாயமே சோகத்தில் மூழ்கிய நாள்,
அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர்! பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான் (திருக்குர்ஆன் 14:42)
My soul is trempling and tearing eyss while reading this incident. Mr Modi... wait for doomsday.
ReplyDeleteமேலே கூறப்பிடப்பட்ட குர்ஆன. வசனம் " ஏன் உங்கள் இறைவன் கீழ் இறங்கி வந்து அவனது அடியார்களை காப்பாற்றமாட்டானா? " என்று கேட்கும் இஸ்லிமிய விரோதிகளுக்கான விடைதான் அது.
ReplyDeleteஅநீதி இழைக்கப்பட்டவன் கேட்கும் துஆக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்த திரையுமில்லை ( ஹதீஸ்)