18 பில்லியன் டொலர் பணத்தை, தேடித் தரும்வரை பார்த்து கொண்டிருக்கிறேன் - மஹிந்த
வௌிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைத்துள்ளதாக கூறப்படும் 18 பில்லியன் டொலர் பணத்தை தேடித் தரும் வரை தான் பார்த்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
18 பில்லியன் டொலர் பணத்தை முடியாவிட்டால் ஒரு பில்லியன் பணத்தையாவது தேடித் தருமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக கூறினார்.
தனக்கு மாத்திரமன்றி நாமல் ராஜபக்ஷவிற்கும் இதுபோன்று வௌிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணம் வைத்துள்ளதாக கூறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் நாட்டின் ஊடக சுதந்திரம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திலும் ஊடகவியலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதாக கூறினார்.
ஜனவரி 08ம் திகதியின் பின்னர் கட்சியின் தலைமைத்துவத்தையும் விட்டுக் கொடுத்ததாக கூறிய அவர் மக்கள் இன்னும் தன்னைத் தேடி வருவதாகவும் "மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு மஹிந்த" என்றும் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடம் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இப்படித்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் யார் அந்த பொது வேட்பாளர் என்று கூறிகொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தீர். பிறகு ஆப்பை சாப்பிட்டு ஆப்பு வைக்கப்பட்டது. அதே போல் எங்கெங்கு யார் யார் பெயரில் பணமும் சொத்துக்களும் இருக்கு என்பது வெளிவரும். அவசரபடாதங்க அப்பு.
ReplyDeleteஇப்படித்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் யார் அந்த பொது வேட்பாளர் என்று கூறிகொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தீர். பிறகு ஆப்பை சாப்பிட்டு ஆப்பு வைக்கப்பட்டது. அதே போல் எங்கெங்கு யார் யார் பெயரில் பணமும் சொத்துக்களும் இருக்கு என்பது வெளிவரும். அவசரபடாதங்க அப்பு.
ReplyDelete18பில்லியனை தொலைத்த நீங்கள் பொலிஸ்சில் முறைப்பாடு செய்துள்ளீர்களா...எப்போது தொலைத்தீர்கள்?கறுப்பு பணத்தினை கண்டுபிடித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்பார்களா?சிருபிள்ளைத்தனமா பேசுரீங்க உங்க பேச்சைக்கேட்ட்க ஒரு கூட்டம் பின்னால் திரியுது......என்ன பொழப்போ...
ReplyDelete