16 வயது சிறுமிக்கு உரிமை கோரும் 3 குடும்பங்கள்..!
கடந்த 20ஆம் திகதி கல்முனைப் பொலிஸாரால் மீட்கப்பட்ட 16 வயது நிரம்பிய சிறுமியை 3 குடும்பங்கள் உரிமை கோரியுள்ளதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி அனர்த்தத்தின்போது காணாமல் போனதாக கூறப்படும் ஆறு வயதுசிறுமி மற்றும் உரிமை கோரும் பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் நேற்று (03) புதன்கிழமை உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றினால் குறித்த சிறுமி அம்பாறை சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ் வழக்கு விசாரனை புதன்கிழமை (03) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சிறுமியை உரிமை கோரும் பெற்றோர் மற்றும் சிறுமியின் மரபணு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை மூன்று குடும்பங்கள் உரிமை கோரியிருந்த போதிலும் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த ஒரு குடும்பமே புதன்கிழமை நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.
Post a Comment