Header Ads



ஞானசாரர் உட்பட 13 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க கோரும், மனு விசாரணைக்கு ஏற்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

மாலபே தலாஹேன பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க ஜெப நிலையம் ஒன்றை 2008 ஆம் ஆண்டு தாக்கியதாக ஞானசார உட்பட 13 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி, சந்தேக நபர்களை குற்றவாளிகள் என உத்தரவிடக் கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

No comments

Powered by Blogger.