1176 பயணிகளுடன் மிகப்பெரிய கப்பல், அம்பாந்தோட்டைக்கு வருகிறது
நெதர்லாந்திற்கு சொந்தமான மிகப்பெரிய அதிசொகுசு பயணிகள் கப்பலான எம்.எஸ்.ரொட்டடம் எதிர்வரும் ஞாயிறன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தரவுள்ளது. 238 மீட்டர்கள் நீளங்கொண்ட இக்கப்பலில் 600 ற்கும் அதிகமான நிர்ருவாக குழுவினர்கள் உள்ளார்கள். இந்தியாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து வருகைதரவிருக்கின்ற இக்கப்பலானது ஞாயிறு காலை 8.00 மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூறமிடும். இக்கப்பலில் 1176 பயணிகள் வருகைத்தரவுள்ளார்கள்.
இதற்கு முன்னர் யூரோபா 2 என்கின்ற மிகப் பெரிய பயணிகள் கப்பலே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தந்தது. 226 மீட்டர்கள் நீளங்கொண்ட அக்கப்பல் கடந்த 29ம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தந்தது. எதிர்வரும் 7ம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தரவிருக்கின்ற எம்.எஸ்.ரொட்டடம் கப்பலில் 1500 வரையிலான பயணிகள் பயனஞ் செய்வதற்கான வசதிகள் காணப்படுவதுடன் இது உலகின் முன்னனி; பயணிகள் கப்பலாகும். இவ்வாறான 13 அதிசொகுசு பயணிகள் கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ளன. அதிசொகுசு பயணிகள் கப்பல்களின் வருகையின் மூலமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிய அபிவிருத்தி படிமுறைகள் வளர்ச்சியடைவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார். இதன் மூலமாக அம்பாந்தோட்டையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் பொருளாதாரம் வளர்ச்சியடையுமெனவும் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.
' அம்பாந்தோட்டை துறைமுகத்தை , துறைமுகமாக அபிவிருத்திச் செய்யும் பொழுது ஒரு சில துறைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தலாம். அவற்றுள் முதலாவது அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அண்மையில் தொழிற்பேட்டை வலயமொன்றினை ஸ்தாபித்தல். இரண்டாவது , துறைமுகத்திற்கு அருகாமையில் அபிவிருத்தி வலயங்களை ஏற்படுத்தல். அம்பாந்தோட்டைக்கு அண்மையிலுள்ள பிரதேசங்கள் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் என்பதனை நாங்கள் நன்றாகவே அறிவோம். அது போலவே புத்தள , பலட்டுபான , யால மற்றும் உடவளவை போன்ற சுற்றுப்புறச் சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் அம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு அண்மையில் காணப்படுகின்றன. அநேகமான சுற்றுலாப்பயணிகள் வனஜீவராசிகளை கண்டுக்களிப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். எனவே எதிர்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அதிகளவு பயணிகள் கப்பல்களை கொண்டுவரும் திறன் எங்களுக்குள்ளது. மெய்யாகவே துறைமுகமொன்றில் கொள்கலன்கள் கப்பல்கள் மூலமாகவே அதிகளவு வருமாணத்தை ஈட்டிக்கொள்ளலாம் ஆனால் பயணிகள் கப்பல்கள் மூலமாக உயரிய வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாது என்ற போதும் பயணிகள் கப்பல்கள் வருகை மூலமாக வெவ்வேறு துறைகளிலிருந்து பல்வேறுப்பட்ட வருமானங்களை ஈட்டிக்கொள்லாம் எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வருகை தேசிய பொருளாதார வளர்ச்சியின் பிரதான ஊந்துகோளாக அமையுமென நான் கருதுகின்றேன்....' என அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.
Post a Comment