மகிந்தவின் கோட்டையில் 1000 ஏக்கர் நிலத்தை கேட்கும் சீனா - அனுமதிக்கும் நிலையில் ரணில்
அம்பாந்தோட்டையில் சிறப்பு முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு, ஆயிரம் ஏக்கர் நிலத்தை தர வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பாந்தோட்டையில், சிறப்பு முதலீட்டு வலயம் ஒன்றை ஏற்படுத்த., சீனாவுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே, அம்பாந்தோட்டையில், சிறப்பு முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை தருமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அம்பாந்தோட்டையில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நேற்று -20- அங்கு மேற்கொண்ட பயணத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு மேலதிக சீன முதலீடுகள் வந்திருப்பதாகத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அம்பாந்தோட்டையில் கப்பல்களை கட்டும் தளம் ஒன்றை அமைக்க சீன நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கம் சீனாவுக்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ள நிலையில், வாய்ப்புகளை தவறவிட்டால், முதலீட்டாளர்களை சிறிலங்கா இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment