ஜீமெயிலை பயன்படுத்தும் 100 கோடி பேர், சிக்கனத்தை கடைபிடிக்கும் யாஹூ
100 கோடி பயனாளர்களை தாண்டி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் வரிசையில் இணைந்திருக்கிறது ஜி மெயில்.
தினந்தோறும் நாம் பயன்படுத்தும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது ஜி மெயில். மின்னஞ்சல் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கூகுளின் ஜி மெயிலுக்கு அருகில் கூட வர முடியாத அளவிற்கு முன்னணியில் உள்ளது ஜி மெயில். இந்நிலையில் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன பங்குதாரர்களிடமும், செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள செய்தியில் ஜி மெயிலை பயன்படுத்தும் பயனார்களின் எண்ணிகை கடந்த மே மாதம் 900 மில்லியனாக இருந்தது. கடைசி காலாண்டில் இந்த எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜி மெயிலின் சேவையை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு வெளியிலான கணக்குபடி ஜி மெயிலின் போட்டி நிறுவனமான அவுட்லூக் 420 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. யாகூ 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவல்படி 280 மில்லியன் பேர் யாகூ மெயிலை பயன்படுத்துகிறார்கள்.
கம்ப்யூட்டர்களில் இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் (search engine) முன்பொரு காலத்தில் பிதாமகராக திகழ்ந்திருந்த யாஹூ நிறுவனம், பின்னர் வந்த கூகுள் என்ற ஜாம்பவானிடம் தனது செல்வாக்கை பறிகொடுத்தது.
2...............................
சரிவில் இருந்து யாஹூவை மீட்க எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் பெரிய அளவிலான பலன்களை அளிக்காத நிலையில், தலைமை செயல் இயக்குனர்களை (CEO) அடுத்தடுத்து மாற்றி முயன்றும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவந்த யாஹூவின் புதிய செயல் இயக்குனராக கடந்த 2012-ம் ஆண்டு மரிஸா மேடர் என்ற பெண் பதவியேற்றார்.
இருப்பினும், நிர்வாகத்தின் லாபத்தையோ, அதன் பங்குகளில் அபரிமிதமான வளர்ச்சியையோ எட்டமுடியாமல் யாஹூ தொடர்ந்து திணறி வருவதால் பங்குகளை வாங்கிய பெரும்பாலானவர்கள் கொதிப்படைந்துள்ளனர். தற்போதைய நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியே போக வேண்டும் என பங்குதாரர்களில் ஒருதரப்பினரும், நிறுவனத்தின் ஒருபகுதியை வேறொருவருக்கு விற்றுவிட வேண்டுமென மற்றொரு பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை யாஹூவின் பங்குகள் 1.2 சதவீதம் அளவுக்கு அதாவது, 29.14 டாலர்கள் அளவுக்கு வரலாற்றுச் சரிவை சந்தித்தது. இதையடுத்து, சிக்கன நடவடிக்கையாக யாஹூ நிறுவனத்தின் சில பிரிவுகளை மூடிவிட்டு அவற்றில் பணியாற்றிவரும் 15 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட யாஹூ தலைமை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான முறையான அறிவிப்பு அந்நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிதிநிலை அறிக்கையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என தெரிகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நிலவரப்படி, யாஹூவில் 12,500 முழுநேர பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களில் 1500 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போதைய முடிவின்படி 15 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவது என்றால் சுமார் 1650 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment