நாத்திக கருத்துகளை பதிவேற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 2000 சவுக்கடியும்
சமூக வலைதளங்களில் நாத்திக கருத்துக்களை பதிவேற்றி வந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் 28 வயதுடைய நப்ர் ஒருவர் தனது சமூகவலை பக்கத்தில் தொடர்ந்து நாத்திக கருத்துகளை பதிவேற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வரும் சவுதியின் சிறப்பு பொலிஸ் படை அந்த நபரை கைது செய்துள்ளது.
தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபர், தாம் பதிவேற்றிய கருத்துகள் அனைத்தும் தமது சொந்த கருத்துகள் எனவும்,
தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் தமக்கு இருப்பதாகவும், அதனால் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த நபர் பதிவேற்றியுள்ளதாக கூறும் 600 பதிவுகளை சிறப்பு பொலிஸ் படை கண்டெடுத்துள்ளது.
கடவுள் இருப்பதை மறுத்துள்ள அந்த பதிவுகள் குர்ஆன் வசனங்களையும் கேலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீதான வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்த நிலையில், அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறையும் 2000 சவுக்கடியும் தண்டனையாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4000 பவுண்டு அபராதமும் விதித்து சவுதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
எந்த நாட்டு பிரஜை?
ReplyDelete4000 pounds ennum pothe theriginradhu... Avar or European enru
ReplyDelete