Header Ads



எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்தின் கண்ணீர்க் கதை - பகுதி -1

-நஜீப் பின் கபூர்-

இந்தத் தலைப்பில் சில தகவல்களைச் சொல்ல முனைகின்ற போது,  முஸ்லிம் சமூகத்தின் மீது இந்தக் கட்டுரையாளனுக்குள்ள கடும் கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் மேலோங்கி நிற்க்கின்றது.

சில சமயங்களில் நாம் ஊடகங்களுக்கு கட்டுரைகளை எழுதுகின்ற போது அந்த ஊடகங்களுக்கு எமது வார்த்தைகளை அப்படியே பிரசுரிப்பதில் நிறையவே நெருக்கடிகள் இருக்கின்றன. இன்னும் சில ஊடகங்கள் சில அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குவதால் அவற்றிற்கு எமது வார்த்தைகளை ஜீரனித்துக் கொள்வதிலும் நிரையவே நெருக்கடிகள் - சங்கடங்கள் இருந்து வருகின்றன. எனவே அருவையில் பிழைத்து சமூகத்தின் கண்ணீர் கதை ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பு.  பீடிகை அப்படிப் போக, தலைப்புக்கு வரலாம் என்று நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் பெரும்பாலான பௌத்த மக்கள் பொதுவாக கடும் இனவாதிகள் அல்ல. என்றாலும் சிறுதொகை  இனவாதிகளின் கடுமையான ஊடுறுவல்கள்-ஆதிக்கம்  காரணமாக இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கு தொந்தரகவுளும்; நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சமூகத்திற்கு விமோசனம் உரிமை பெற்றுத்தரவே நாம் கட்சி நடாத்துகின்றோம், கோதாவில் நிற்கின்றோம் என்று தேர்தல் காலங்களில் ஊளையிடுகின்றவர்கள் அண்மைக்காலமாக ஒட்டுமொத்த சமூகத்தை  சந்தையில் நிறுத்தி அதன் மூலம் தங்களது வாழ்க்கையை  ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இவன் போன்றவர்களின் குற்றச்சாட்டு.

இந்த எல்லை நிர்னய விடயத்தில் முஸ்லிம் சமூகத்துக்குத் துரோகம் இழைத்திருப்பது பெரும்பான்மை அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்பதனை விடவும் இந்த சமூகத்தில் உள்ள கோடறிக்கம்புகளே!

இப்படியான வார்த்தைகளில் எமது கோபத்தை வெளிப்படுத்துவது மட்டும் ஒரு நாகரிகமான செயலாக இருக்க மாட்டது. எனவே அதற்கான ஆதாரங்களை நாம் இங்கு தொட்டுச் சொல்லித்தானேயாக வேண்டும். 

அரசியல் வியாபாரிகள்

இந்த உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்னய விவகாரம் 2010களில் அதாவது இன்று ஆறு வருடங்களுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வந்;திருக்கின்றது. 07.10.2010 ம் நாம் அனுப்பி வைத்திருந்த ஒரு அறிக்கையை தனது தலைப்புச் செய்தியாக எடுத்துப் பிரசுரித்த விடிவெள்ளி உள்ளுராட்சி மன்ற எல்லைகள் விடயத்தில் இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறக்கூடாது என்று சொல்லி இருந்தது. அத்துடன் இது விடயங்களில் பள்ளி நிருவாகங்களைத் தலையிடுமாறும் நாம் அதில் கேட்டிருந்தோம் ஆனால் அரசியல்வாதிகளைப் போன்றே இந்த விடயங்களை பள்ளி நிருவாகங்களும் கண்டு கொள்ளவில்லை. அல்லது இந்த விவகாரம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நாம் கணக்குப்போடலாம். இன்னும் சிலர் இது எங்கே நடக்கின்ற விடயமா என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள் அன்று.

அதன் பின்னர் அமைச்சர் அதாவுல்லா காலத்தில் இதற்காக நியமிக்கப் பட்ட குழுவில் நஹியா முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார்.? அவரை உத்தியோக பூர்வமாக அவரது அலுவலகத்தில் நாம் சந்தித்த போது இதில் அநியாயங்கள் நடப்பதற்கு இடம்கிடையாது எல்லாம் நேர்மையாக நடக்கும் என்ற தோரனையில் கதை சொன்னார்.

எல்லை நிர்னயம் தொடர்பான அடிப்படைத் தகவல்களைக்கூட அவர் எமக்கு அன்று வழங்கவில்லை. இது பற்றி தனது குற்றச்சாட்டுக்களை ஊடகங்களுக்குச் அன்று ஐக்கிய சகோதரத்துவக் கூட்மைப்பு இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு தனது அறிக்கையில் சொல்லி இருந்தது. அதில் அடங்கி இருந்த வாசகத்தை அப்படியே இங்கு தருகின்றோம்.

'அரசும் அதிகாரிகளும் எல்லை நிர்னயம் தொடர்பான தகவல்களைக் கேட்டாலும் அவர்களைச் சந்தித்து இது பற்றிய தகவல்களைக் கேட்டபோது, எல்லை எவ்வாறு அமைய வேண்டும், அதற்கு உள்வாங்கப்படுகின்ற சனத்தொகை, வாக்காளர் எண்ணிக்கை பிரதேதசப் பரப்பளவு போன்ற அடிப்படைத் தகவல்கள் எதுவும் வழங்கப்பட வில்லை. எனவே எப்படி சிறுபான்மை சமூகம் தனது சிபார்சுகளை முன்வைக்க முடியும்' என்று அன்று கேள்வி எழுப்பி இருந்தோம். (விடிவெள்ளி 06.112013திகதி) 

அதே தினத்தில் பிரசுரமான விடிவெள்ளியில் மற்றுமொரு இடத்தில் எல்லை நிர்னய விடயத்தில் 'முஸ்லிம் சமூகம் உறுப்படியாக எதையும் பண்ணவில்லை எனவே அவர்கள் நலன்கள் பறிபோவது தவிர்க்க முடியாது' என்று நாம் எச்சரிக்கை  செய்திருந்தோம். இவை இன்று 6 முதல் 3 வருடங்களுக்கு முன்னைய செய்திகள் என்பதனை சமூகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தவிர 'பெரும்பான்மை சமூகத்தின் நலன்களினால் இயற்றப்படும் சட்டங்களினால் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர்' எல்லை நிர்னயவிடயத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் பலத்த அச்சுறுத்தல் என்றும் நாம் ஊடகங்களில் இதே காலப் பகுதியில் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தோம். (28.10.2010 விடிவெள்ளி)

'உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலம்! முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பார்வையாளர்களாக இருக்கின்றார்கள் ஜனாதிபதி தலையிட வேண்டும்' என்று கேட்டிருந்தோம் (14.10.2010 விடிவெள்ளி)

பல வார இதழ்களில் சம நேரத்தில் 'புதிய உள்ளுராட்சி மன்ற எல்லைகள் குரங்கு நிறுத்த அப்பத்தின் கதை' என்று 2012 நவம்பர் மாதம் பிரசுரமான பல கட்டுரைகளில் சமூகத்திற்குச் சொல்லி இருந்தோம்.

சமூகத்தின்; பேரால் கட்சி நடத்துகின்ற ஒரு தலைவர் இந்த விடயம் நடக்காது ரணில் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் ஜேவிப்பியும் இதற்கு ஒத்துக் கொள்ளாது என்று தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

அது பற்றி நாம் இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும்  அவ்வப்போது அந்தத் தலைவரின் பெயரைச் சொல்லியே கேள்வி எழுப்பி  இருந்தோம். எனவே நமக்காக இருந்த அதிகாரியும் தமது கடமையைச் செய்ய வில்லை அரசியல்வாதிகளும் இது விடயத்தில் காரியம் பார்க்கவில்லை.

இது வரையும் இந்த உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய விடயங்களில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகம் பல ஆண்டுகளாக எதையும் உறுப்படியாகச் செய்ய வில்லை என்று நிருவி இருக்கின்றோம்.

கோமாளிகள் கூத்து

இப்போது சமகாலத்தில் இந்த எல்லை நிர்னயம் தொடர்பாக நடக்கின்ற சில கோமாளித்தனங்கள் பற்றி சமூகத்துக்குச் சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

புதிய அரசு பதவிக்கு வந்ததும் இது சுதந்திரக் கட்சி, குறிப்பாக பசில் ராஜபக்ஷ விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப இந்த எல்லை நிர்னயம் நடந்திருக்கின்றது. எனவே இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும்  என்று கோரிக்கைகள் வந்தன. தற்போதய நல்லாட்சி அரசும் அதற்கு இடம் வழங்கியது. இதற்காகக் கொடுக்கப்பட்ட காலம் கடந்த 21.1.2015ல் முற்றுப் பெற்றது. அப்போதும் இந்த விடயத்தில் நமது சமூகம் எதையும் செய்யவில்லை. அந்தக் காலக்கெடுவும் முடிந்தது.

தற்போது மீண்டும் திருத்தங்களை செய்ய இறுதி சந்தர்ப்பம் என்று சில நாட்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.