மன்சூர் கர்னி என்ற 4 வயது, சிறுவனுக்கு ஆயுள் தண்டனை
எகிப்து நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது மோர்சியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ராணுவ தளபதியாக முன்னர் பதவிவகித்த அப்டெல் பட்டா அல் சிசி தற்போது அங்கு ஆட்சியாளராக இருந்து வருகிறார்.
இவரது ஆட்சிக்கு எதிராக கலவரங்களில் ஈடுபட்ட புரட்சியாளர்கள் மீது கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின்போது கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில் 115 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த 155 பேரில் தற்போது நான்கே வயதாகும் அகமத் மன்சூர் கர்னி என்ற சிறுவனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒரு வயதாக இருக்கும்போது அந்த குழந்தை எப்படி கொலை செய்திருக்க முடியும்? என இவ்வழக்கின்போது அந்த சிறுவனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் கேள்வி எழுப்பியும், 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்த அந்த சிறுவனின் பிறப்புச் சான்றிதழை கோர்ட்டில் தாக்கல் செய்தும் இவற்றை நீதிபதி ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கொலைக்கு திட்டம் தீட்டுதல், கொலை முயற்சி, கொலை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் அகமத் மன்சூர் கர்னி என்ற நான்கு வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
are you crazy..... mad dgs
ReplyDeleteவயது பிரச்சினை இல்லைமுஸ்லிம் கொல்லப்பட வேண்டும் அதுதான் சட்டம்
ReplyDelete