Header Ads



YLS இன் தடை ஆணை மனு நிராகரிப்பு, வழக்கும் ஒத்திவைப்பு

அமைச்சர் றிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளரின் நியமனத்திற்கு எதிராக, அதன் பொதுச் செயலாளராக இருந்த ஹமீட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  தாக்கல் செய்திருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிசா பதியூதீன் அதன் தேசிய அமைப்பாளர் உட்பட 15 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ருந்தனர்.

அதன் மீதான விசாரணை இன்று (21) விசாரணைக்கு வந்தபோது ஹமீட்டின் வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சுபைதீன் அந்த பதவியில் கடமையாற்ற அனுமதி வழஙக்கியது.

அமைச்சர் றிசாத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், சட்டத்தரணி ஹேஐஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் வாதடினர்.
வாதங்களை செவிமடுத்த நீதிபதி, YLS ஹமீட்டின் தடை ஆணை மனுவை நிராகரித்ததுடன், வழக்கையும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.


2 comments:

  1. Oஇது தேவையா மக்கள் நலனில் அக்கறையை காட்டாமல் தனக்கு போனஸ் எம் பி பதவி கிடைக்காத ஆதங்கம் போங்க போய் புதிய கட்சியை ஆரம்பிங்க

    ReplyDelete
  2. Summa kidantha sanga oothik keduththullar

    ReplyDelete

Powered by Blogger.