Header Ads



UNP அமைச்சர்கள் மீது மைத்திரி அதிருப்தி, கிராமங்களுக்கு செல்ல முடியாதிருப்பதாகவும் கவலை

-GTN-

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.'எதுவும் நடக்கவில்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களிடம் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்களும் தனியார் துறையினரும் பொறுமை இழந்துள்ளதாக ஜனாதிபதி அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் பயனற்றது என பெரும்பான்மையானவர்கள் கருதத் தொடங்கியுள்ளதாகவும், கிராமங்களுக்கு தம்மால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பேசுவதுடன் மட்டும் நின்றுவிடாது செயற்பாடுகளில் தீவிரம் காட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேவை என்றால் சரியான இடத்திற்கு சரியான நபர்களை நியமித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. This is not because of them....All the faults from your side Mr. President..... Then what about your party currepted ministers....?

    ReplyDelete

Powered by Blogger.