ஹிருணிக்கா இளம் Mp, அவர் செய்தது சரியானது என நினைத்துள்ளார் - பொன்சேகா
வெலே சுதாவிடம் பணத்தை பெற்ற சிலர்
ஹிருணிக்காவுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக அவரது பிரச்சினை பெரிதானதாக
ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜனநாயகக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ஜயசூரியவிடம் நான் இது பற்றி விசாரித்தேன்.
சாதாரணமாக நண்பர்களிடம் பிரச்சினை ஏற்பட்டு விட்டால், மீண்டும் நட்பாக்கி கொள்ள, நெருக்கமாக்கி கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
இழுத்து கொண்டு வந்தாவது நண்பனாக்கி கொள்ள முயற்சிப்பாளர்கள். ஹிருணிக்கா இளம் நாடாளுமன்ற உறுப்பினர். அவரது மனநிலையில் அவர் செய்தது சரியானது என அவர் நினைத்துள்ளார்.
எனினும் சட்டரீதியாக பார்த்தால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும். வெலே சுதாவிடம் பணம் பெற்றுக்கொண்ட சிலர் ஹிருணிக்காவுக்கு எதிராக வேலை செய்ததன் காரணமாகவே பிரச்சினை இந்தளவுக்கு பெரிதானது.
டிபென்டர் வாகனத்தை பயன்படுத்தியதே இங்கு பிரச்சினையாகியுள்ளது. நெனோ கெப் அல்லது முச்சக்கர வண்டியில் சென்று பிரச்சினையை தீர்த்து கொண்டிருந்தால், ஊடகங்களில் இப்படி தொடர்ந்தும் அந்த செய்தி வெளியிடப்பட மாட்டாது. இந்த இடத்தில் டிபென்டர் பிரச்சினைதான் காணப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் செல்லும் முன்னர் ஹிருணிக்காவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டார். அவர் அதற்கான கடிதத்தில் கையெழுத்து போட்டு விட்டு சென்று விட்டார்.
ஆனால், இதனை விட மிகப் பெரிய கொள்ளைகளுக்கு அவர் இப்படி உத்தரவிடவில்லை.
அவன்கார்ட் சம்பந்தமாக உத்தரவொன்றை வழங்க சட்டமா அதிபரால் முடியாது போனது. மனம் திரிபுப்பட்டு போனது. பின்னடிப்புச் செய்தார் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஓடினேன்...ஓடினேன்....நீதியின் உயர்மட்டம்வரை ஓடினேன் வாழவிட்டார்களா?என்னை சிரையிலிட்டார்கள் ஓயமாட்டேன் அதே நிதியைதான் திருப்பிக்கேட்கின்ரேன் எங்கே போனது இப்போ அந்த நீதி அந்த அவசரசட்டங்கள் ஏன்தட்டிக்கேட்க தயக்கம் பாதிக்கப்பட்டது நான்மட்டுமல்ல இந்த நாட்டு மக்கலுமே.........
ReplyDeleteal visath நீங்க நல்லா படம் பார்பீங்கபோல
ReplyDeleteசெய்திகள் படித்தால் கற்பனைதான வரும் இதுவும் ஒரு படம்தான்........பாடமும்தான்
ReplyDelete