Header Ads



இனவாதிகளுக்கு உரமூட்டும் மைத்திரியினால், முஸ்லிம்கள் மனவேதனை - முஜிபுர் ரஹ்மான் Mp

பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த காலங்களில் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது காழ்புணர்வுகொண்டு எழுப்பிய கோசங்களில் பிரதானமாக மாடறுப்பு விவகாரம் இருந்து வந்தது. அவர்கள் முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவுமே மாடறுப்பு விவகாரத்தை பூதாகரமாக்கினர்.

புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்விவகாரம் ஓரளவு தனிந்திருந்தது. மீண்டும் அதற்கான ஆரம்ப புள்ளியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வைத்துள்ளார். இது இனவாதிகளின் கருத்துகளுக்கு உரமூட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்த முஸ்லிம்கள் நாட்டில் சகல மக்களினதும் கலாச்சாரம் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தனர் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும், 

நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு சிறுபான்மை மக்கள் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர். அத்துடன் இதில் முஸ்லிம்களின் பங்கனது மகத்தானது எனலாம். இந்நிலையில் மாடறுப்பு குறித்த ஜனாதிபதியின் கருத்து முஸ்லிம்களை அவமதிப்புக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களின் உணவு உண்ணும் உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் உரிமை மீறப்பட்டு மிகவும் மனவேதனையடைந்துள்ளனர் குறிப்பிட்டார்.

நாட்டில் மாடறுப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெ ளிநாடுகளிலிருந்து மாட்டிறைச்சியை உணவுக்காக இறக்குமதி செய்யலாம் என குறிப்பிட்டிருக்கின்றார். அப்படியானால் எமது நாட்டிலல்லாமல் வெ ளிநாடுகளில் மாடுகளை அறுப்பதற்கு இடமளிக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகின்றாறா? ஏனெனில் இங்கு மாடு அறுப்பட்டாலும் வெ ளிநாடுகளில் மாடு அறுக்கப்பட்டாலும் அது மிருக வதையாகவே குறிப்பிட வேண்டும்.

மடு அறுப்பது மாத்திரம் மிருக வதை என பார்க்கின்ற ஜனாதிபதி, ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை அறுப்பதற்கு தடை விதித்திருக்கலாமே. அத்துடன் பெரஹெராவிற்கு யானைகளை பயன்படுத்துவதும் மிருக வதையாகவே பார்க்கவேண்டும். மட்டுமல்லாது நாட்டில் மீன்பிடி தொழிலையே தடை செய்ய வேண்டும். இவையெல்லாம் மிருக வதையாக பார்க்காத ஜனாதிபதி ஏன் மாடறுப்பை மாத்திரம் மிருக வதையாக குறிப்பிட வேண்டும்? என்று முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

இனவாதிகளின் வேட்கைகளுக்கு இடமளிக்காது நாட்டில் சகல மக்களினது உரிமைகள் குறித்தும் ஜனாதிபதி சிந்திக்க தலைப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கத்திற்கு செல்வதற்கான அத்திவாரங்கள் இடப்படக் கூடாது என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

7 comments:

  1. Very goog question. Hon.my3, please awnser for Mr Mujiburahman.
    this question for all who are hating for slaughtering of cows.

    ReplyDelete
  2. ஜனாதிபதியின் இந்த பேச்சுக்கு கூடிய விரையில் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு முஸ்லிம்களுக்கு சாதகமான பதில் வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. அரசாங்கத்தை உருவாக்க உயிரை பணயம் வைத்து வந்த முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி கொடுக்கும் பிரதி பலனா இது தேர்தல் காலத்தின் போது ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக வசை பாடிய பொது பல செனாவுடையவும் ராவண பல செனாவுடையவும்,விமல் வீரவங்க்சவுக்கும் ஆதரவாக இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பாரதூரமான அறிக்கையை விட்டிருப்பது ஜனாதிபதிக்கு என்ன நடந்தது என்று முஸ்லிம்கள் கவலையடைகிறார்கள்.(கஷ்டப்பட்டு மீன் பிடிப்பது ஒருசிலர் பங்குக்கு வருவது பலபேர்)மகிந்தவின் பயத்தால் ஒலித்துக்கிடந்தவர்கலல்லால் இப்போது மைத்திரி சபையில் முன் வருசையில் உயிரை கையில் பிடித்து திரிந்தவர்கள் இப்போது நாடு ரோட்டில் இதுதான் யஹ பாலன ஆண்டுவ மகிந்தவின் தோல்விக்கு காரணம் அல்லாஹ் ஒருவனை வணங்குவோம் என்ற முஸ்லிம்களின் மனதை தீயக்கியது கண்ணீர் சிந்தவைத்தது இதுவே அவர் இப்போது பன்சலைகளில் ஏறி இறங்கி திரிவது.இதை ஜனாதிபதி மைத்திரி தெரிந்து கொள்ள வேண்டும் அவர் பேசியதை மீளப்பெற வேண்டும்.மஹிந்த இவ்வாறு பகிரங்கமாக மாடு விடயத்தில் அறிக்கை விடவில்லை.உள்ளங்கையில் உப்பு வைத்தவனை ஊளிள்ள (ஆயுள் ) காலமும் மறக்கக்கூடாது.நீங்களே சொன்னீர்கள் நான் மகிந்தவிடம் தோல்வியடைந்து இருந்தால் ஆறடி நிலத்துக்குள் போய் இருப்பேன் எனது குடும்பத்தார்களை கைது செய்து சித்திர வதை செய்திருப்பார்கள் என்று இப்போது அதுவெல்லாம் மறந்து விட்டதா ?

    ReplyDelete
  4. Really this govt need majourity s support.thats what my3 behaving like this.no worry.everything is drama

    ReplyDelete
  5. Sana faleel how do you know this...its worry situation.carefully watching president..he is going mahindas way.mujibur rahman instead of giving statement. .talk this in parliament. Don't fool us..

    ReplyDelete
  6. Mujibur rahman..instead of arikkai..why can't you talk in parliament. Atleast you are better than that fox hakeem and slmc cows.

    ReplyDelete
  7. a silent dictator.commonly leaders will fear that their actions may fail to second term.but he is not willing to sit for next term.so whatever he likes he will do.

    ReplyDelete

Powered by Blogger.