இயற்கை மூலிகை மருந்தின், அருமைபுரிந்த மன்சூர் Mp
முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் இயற்கை மூலிகைகளின் வகைகளையும், அதன் நோய் எதிர்ப்பு சக்திகளையும் அறிந்து வைத்துள்ள ஒருவர் என்பது நாம் அறிந்திராத ஒரு விடயமாகும்.
சம்மாந்துறையில் நேற்று 15-01-2016 வாய்க்கால் ஓரமாக சென்று கொண்டிருந்த போது திடிரென வாகனத்தை நிறுத்தச் சொன்ன பாராளுமன்ற உறுப்பினர், வாகனத்தை விட்டு இறங்கி வாய்க்கால் ஓரமாக இருந்த பற்றைகளை உற்று கவனித்துக் கொண்டிருந்தார். நாங்களும் சேர் எதைத் தேடுகின்றீர்கள் எனக் கேட்டதற்கு "மொசுமொசுக்கை" என்ற பதில் மட்டுமே வந்தது.
பதில் வந்த கையேடு வாய்க்காலிலும் இறங்கி ஒரு வகையான தாவரத்தை பிடுங்கி எடுத்து எம்மிடம் தந்து கொண்டிருந்தார். எமக்கும் இது தொடர்பாக அறிய வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. அப்போது நாமும் இம் மொசுமொசுக்கை தொடர்பாக எமக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை கேள்விகளாக தொடுத்த போது அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு தருகிறோம்.
மொசு மொசுக்கை இணை முசுமுசுக்கை, ஐலேயம், இரு குரங்கின்கை எனவும் அழைப்பர். இதன் தாவரவியற் பெயர் - mukia Scabrella (முக்கியா ஸ்கப்ரில்லா) என்று கூறுவார். பனிக்காலம் ஆரம்பமாகிவிட்டால் சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் சளி, இருமல், முட்டுத்தொய்வு போன்ற நோய்களால் அவதிப்பட நேரிடும் போது இம்மொசு மொசுக்கை மிகச்சிறந்த மருந்தாகும்.
மொசு மொசுக்கை கொடி வர்க்கத்தைச் சேர்ந்தது. மழைக்காலம், பனிக்காலத்தில் வேலியோரங்களிலும், பற்றைகளிலும் தானாகவே முளைத்துப் பிறமரங்களில் படர்ந்து காணப்படும். இதன் தண்டு, இலைகளில் சுணைமயிர்கள் போன்று காணப்படும். தனி இலைகள். வட்டவடிவம். சோனைகளுண்டு. பூக்கள் மஞ்சள் நிறம், காய் பச்சை நிறம், பழம் சிவப்பு நிறம். தூதுவளங்காய் போன்றது.
மழை, பனிக்காலங்களில் மூட்டு, தொய்வு, இருமல் போன்றவற்றால் வருந்துபவர்கள் மட்டுமன்றி ஏனையோரும் மொசுமொசுக்கை இலையைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். இதனை அடையாகவும், அரையலாகவும் செய்து சாப்பிடலாம்.
பெரியவர்கள் மட்டுமன்றிச் சிறுவர்களும் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவு இதுவாகும். தற்காலத்தில் குழந்தைகளுக்குச் சளி, இருமல், முட்டு முதலியன அதிகளவில் ஏற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவர்களுக்கு மொசுமொசுக்கை கூடியதாக உள்ளது. அவர்களுக்கு மொசுமொசுக்கை அடை சிறந்த மூலிகை உணவு மருந்தாகிறது.
மேலும் கபம், வரட்சி, தாகம், இருமல் பித்தம், உள்அழல், சுரம் என்பனவும் இந்த மொசுமொசுக்கையினை சாப்பிடுவதன் மூலம் இல்லாமல் போகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்.அவர்கள் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினருக்கு இயற்கை மூலிகை மருந்தின் மீது இருந்த தெளிவு எம்மை வியக்க வைத்தது.
MP படத்துடன் செடியின் படத்தையும் சேர்த்துப் போட்டிருந்தால் பலன் இன்னும் அதிகரித்திருக்கும்.
ReplyDeleteithu oru news enru publish pannirukku.
ReplyDelete