Header Ads



ரவூப் ஹக்கீமின் சகோதரர், டாக்டர் ஹபீஸ் Mp, றிசாத் பதியுதீனுடன் இணைவாரா..?

-Boomudeen Mailk-

முகா தேசியப்பட்டியல் எம்பியும் ஹக்கீமின் சகோதரருமான டொக்டர் ஹபீஸ் அ.இ.ம.கா வில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

ஹபீஸ் எம்பிக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைத்துவ சபைக்குமிடையில் குறித்த இணைவு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஹபீஸூக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைகளுக்குமான முதற்தடவையான சந்திப்பு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்ற சிற்றுண்டி அறையில் இடம்பெற்றுள்ளது.

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அசைமச்சருமான ரிசாத் பதியுதீ;ன் மற்றும் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர்அலி ஆகியோர் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் உரையாடிக்கொண்டிருந்த வேiளை - முகா எம்பி ஹபீஸூம் வருகை தந்திருந்தார்.

இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த டொக்டர் ஹபீஸ் மிகவும் சோர்ந்த நிலையில் அப்போது காணப்பட்டார்.

' என்ன டொக்டர்? மிகவும் சோர்ந்த நிலையில் இருக்கின்றீர்கள் என ரிசாதும் அமீரலியும் அப்போது வினவினர்.

அந்த நேரம் தான் முதற்தடவையாக கட்சிக்குள் தனக்கு ஏற்பட்டுள்ள உளக்குமுறல்களை அள்ளிக்கொட்டினார் டொக்டர் ஹபீஸ்.

'நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களைக் கௌரவப் படுத்த வேண்டி பொறுப்பு எமக்கு உள்ளது. என இருவரும் அந்த நேரம் ஆறுதல் வார்த்தைகளை டொக்டர் ஹபீஸூக்கு கூறினர்.

இது டொக்டர் ஹபீஸூக்கு மேலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு இவர்கள் மூவரும் உரையாடிக் கொண்டிருப்பதை அவதானித்த முகா எம்பிக்களில் ஒருவர் உடனே பாராளுமன்றத்திலிருந்த ஹக்கீமைச் சந்தித்து ஏதோ முணு முணுத்துள்ளார்.

அந்த எம்பி ' தலைவர் ஹக்கீமிடம் ஏதோ நிச்சயமாக கூறுவார் என புரிந்து கொண்ட டொக்டர் ஹபீஸ் உடனே அவ்விடத்தலிருந்து வெளியேறி நேராக தலைவர் ஹக்கீமைச் சந்தித்தார்.

' தம்பி, ரிசாதுடனும் அமீரலியுடனும் நான் சினேகபூர்வமாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், அவர்களது கட்சியில் இணையுமாறு என்னை வேண்டினார்கள். அவ்வளவு தான் நடந்தது. என்றால் டொக்டர் ஹபீஸ்.

 இவ்வாறு டொக்டர் ஹபீஸ் கூறிய போது ஆ.... அப்படியா....? என ஹக்கீம் வெளிப்படையாக கேட்டாலும் கூட - ஹக்கீமின் உள் மனதில் ஹபீஸ் தொடர்பில் சந்தேகம் ஒன்று தோன்றியது.
இவ்வாறான சம்பவத்தின் பின்னணியில் தான் அ.இ.ம.காவுடன் இணைவது தொடர்பில் அடுத்தடுத்து பேச்சு நடத்தும் எண்ணமும் டொக்டர் ஹபீஸூக்கு ஏற்பட்டுள்ளது.

அ.இ.ம.காவுடன் டொக்டர் ஹபீஸ் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் படி, தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் பாராளுமன்ற அங்கத்தவராக இருப்பதென்றும் கூடியவிரைவில் பிரதியமைச்சுப் பதவியொன்றை பெறுதல் என்றும் அச்சந்திப்பின் போது கொள்கையளவில்; இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணத்தின் கொழும்பு , களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களுக்குமான பொறுப்பாளராக டொக்டர் ஹபீஸை நியமிக்கலாம் என்ற கொள்கையளவான தீர்மானமுளம் அதன் போது எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் நம்பகரமாக தெரியவருகின்றது.

முகா தேசியப்பட்டியல் எம்பியாக டொக்டர் ஹபீஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த பதவியானது அவருக்கு தற்காலிகமானதே என முகா அறிவித்துள்ளது. 

அந்த வகையில் ஹபீஸ் தனது எம்பிப் பதவியை இராஜிநாமா செய்யும் பட்சத்தில் முன்னர் எம்பியாக இருந்தவர் என்ற ரீதியில் அவருக்கு மிகப்பெறுமதிமிக்க உயர் பதவி ஒன்றை ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொடுக்க வேண்டும். 

ஆனால் இதற்கு மாற்றமாக தனது ஊடகச் செயலாளர் பதவியை மீண்டும் பொறுப்பெடுத்துக்  கொள்ளுமாறும் கட்சிப் பத்திரிகையான 'மரம்' என்ற சஞ்சிகைக்கு பொறுப்பாசிரியராக இருக்குமாறும் ஹபீஸை வேண்டும் எண்ணமே ஹக்கீமிடம் தற்போது காணப்படுகின்றது.

ஹக்கீமின் இந்த எண்ணப்பாட்டில் டொக்டர் ஹபீஸ் மிகவும் மன வேதனையடைந்துள்ளார். இதனை ஒரு கௌரவ பிரச்சினையாகவும் பார்க்க அவர் எத்தணித்துள்ளார்.

முகாவின் வளர்ச்சிக்காகவும் தனது சகோதரரான ஹக்கீமின் தலைமையை உறுதிப்படுத்துவதற்காகவும் பெரும் பங்காற்றிருக்கின்றேன்.

அப்படிப்பட்ட நான் தொடர்ந்து ஐந்து வருடங்கள் எம்பியாக இருப்பதற்கு தகுதியுள்ளவன். எக்காரணம் கொண்டும் இராஜிநாமா செய்ய மாட்டேன் என டொக்டர் ஹபீஸ் தனது குடும்ப உறவுகளுடன் உறுதியாக கூறியிருப்பதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.

டொக்டர் ஹபீஸின் இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த முதலாம் திகதி புதுவருட சிறப்பு நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் டொக்டர் ஹபீஸூம் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் சிலர் டொக்டர் ஹபீஸை அணுகி, 'வில்பத்து விவகாரத்தில் தலைவர் ஹக்கீம் ஏன் மௌனம் காக்கின்றார்?, ரிசாத் பதியுதீன் அதற்கு எதிராக போக்கொடி தூக்கிக் கொண்டிருந்த வேளை உங்கள் சகோதரர் தனது பேரப்பிள்ளையுடன் விளையாடும் புகைப்படத்தை அதே தினம் தனது பேஸ்புக்கில் பதிவிடுகின்றார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என டொக்டர் ஹபீஸை நோக்கி வினவினர்?

அது தானப்பா எனக்கும் புரியவில்லை? தொடர்ச்சியாக மௌனமே காத்துவருகின்றார். ரிசாதின் அரசியல் வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்து செல்கின்றது என்று கூறி பெருமூச்சு விட்டவராக அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றுள்ளார் டொக்டர் ஹபீஸ்.

டொக்டர் ஹபீஸ் குறித்த இந்த சம்பவமும் டொக்டர் ஹபீஸ் - மிக விரைவில் அ.இ.ம.காவுடன் இணைந்து கொள்ளலாம் என்ற தகவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் ஊடகத் துறையினர் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகமுக்கிய குறிப்பு - இதுகுறித்து அறிவதற்காக ஜப்னா முஸ்லிம் இணையம் 2 தடவை டாக்டர் ஹபீஸின் 2 கையடக்க தொலைபேசிக்கும் அழைப்பு எடுத்து. ஆனால் அது இயங்கவில்லை.

2 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் "உறுப்பு" அவரோடிருப்பதே அவருக்கும் நல்லது, இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் நல்லது.

    அமைச்சர் ரிசாத் அவர்கள் தமது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கும் தவறான தெரிவுகளும், நபர்களும் ஆபத்துக்களை விலைக்கு வாங்குவதாக அமைவதோடு அவரது நன்மதிப்பையும் இழக்கச்செய்து, அவரது அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ஏமாற்றமாகவும், துரோகமாகவும் அமையலாம்.

    ReplyDelete
  2. இது ஒருபக்க சார்பான ஆக்கம். வாசிப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. ஜப்னா முஸ்லீம் தளம் தனது தரத்தை பாதுகாக்க வேண்டும் எனில் இவ்வாறானவற்றை பிரசுரிக்காமல் விடுவது நன்று.

    ReplyDelete

Powered by Blogger.