Header Ads



KFC இப்படியும் செய்யும்

இங்கிலாந்தில் கோழிக்கு பதிலாக கோழிக்கழிவுகளை வாடிக்கையாளருக்கு பரிமாறிய குற்றத்திற்காக கேப்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இங்கிலாந்தின் Wellingborough பகுதியில் உள்ள கேஎப்சி துரித உணவகத்திற்கு Cassandra Harris(22) என்ற மருந்தாளர் சாப்பிட சென்றுள்ளார்.

அங்கு, 6 பவுண்ட்ஸ் செலுத்தி Zinger tower எனப்படும் கோழி இறைச்சி மற்றும் பர்கரை ஆர்டர் செய்துள்ளார். சாப்பிடுவதற்காக காத்திருந்த அவர், தனக்கு பரிமாறப்பட்ட உணவை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த கோழி உணவு பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் இருந்துள்ளது, மேலும், மூளை மற்றும் கோழியின் இரைப்பை அடங்கிய கோழிக்கழிவுகளை பார்த்த அவர், அதனை தொட்டுக்கூட பார்க்கவில்லை.

மேலும் அவர், ஆர்டர் செய்த பர்கரிலும் முடி இருந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கோழிக்கழிவுகளை பார்த்தவுடன் அதனை தொடுவதற்கு கூட எனக்கு பிடிக்கவில்லை, இனிமேல், நான் கேப்சி துரித உணவகத்தில் சாப்பிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கேப்சி நிறுவனம், அந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரியதோடு மட்டுமல்லாமல், கோழி உணவினை சமைக்கும்போது, தெரியாமல் இதுபோன்ற தவறுகள் சில சமயம் நடந்துவிடுகிறது.

இனிமேல், இதுபோன்று தவறு நடக்காமல் இருப்பதற்கு, அதிக கவனம் எடுத்துக்கொள்ளுமாறு எங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம் எனக்கூறியுள்ளது.

கடந்த ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. விளம்பரத்தால் வியாபாரம்! பிரபல்யமானதுமே அலட்சியம். எக்குத்தப்பாக எங்காவது மாட்டிக்கொண்டால் மட்டும் மன்னிப்பு! மறுபடியும் - அலட்சியம் இதுதான் பல்தேசியக்கம்பனிகளின் குணமே.

    ReplyDelete

Powered by Blogger.