இலங்கையில் உள்ள ISIS பயங்கரவாதிகளின், அனுதாபிகள் கண்காணிக்கப்படுகிறார்கள் - இராணுவம்
சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பில், சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லிம்கள் இணைந்து கொண்டிருப்பது குறித்து, நிலைமைகளை தாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவிடம், ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக எத்தனை இலங்கையர்கள் இணைந்து கொண்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பிய போது-
“சிறிலங்காவில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று ஒரு டசின் வரையானோர் இன்னமும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
சிறிலங்காவில் உள்ள ஐ.எஸ் அனுதாபிகளைக் கண்காணிப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோம். இப்போது அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 36 இலங்கையர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்காக சிரியாவுக்குச் சென்றள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
mr tips தந்தாரா
ReplyDelete