ISIS பயங்கரவாதிகளுக்கு ஆட்களை சேர்க்கும், இலங்கைப் பிரஜை அடையாளம் காணப்பட்டான்
-தகவல் மூலம் BBC-
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐ எஸ் அமைப்பு பல இடங்களில் பலமாக உள்ளனர் அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி பிபிசியிடம் தெரிவித்தார்.
இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும வர் கூறுகிறார்.
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற அனைவரும் இல்லையென்றாலும், அநேகர் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.
பல நாடுகள் ஐ எஸ் அமைப்பை அழித்தொழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன
இதனிடையே, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதக் குழுவுக்கு ஆட்களை சேர்க்கும் இலங்கைப் பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் - BBC
பணத்துக்கு பலி ஆகும் பாவிகள்
ReplyDeleteஇவனெல்லாம் பிழைப்புக்கு வழியில்லாவிட்டால் பிச்சைஎடுப்பதோ நஞ்சுன்டு சாவதோ மேல்
ReplyDeleteNalla Muslim oruvanaawathu intha payaggarawaatha amaippil sera maattaan
ReplyDeleteநெருப்பை அணைக்கும் விட்டில் பூச்சுகள்,...விஷப்
ReplyDeleteபாம்பிற்கு பால் வார்க்கும் பாமரர்கள்,...அப்பாவி
முஸ்லிம்களை எதிரிக்கு விலைபேசும் முட்டாள்கள், .... இந்த
ISIS இல் இணையும் முஸ்லிம்(?)கள்!
உண்மையை உணர்ந்து (ISIS ஐ விட்டு) விலகிடுங்கள்!
உங்கள் எதிரியை (இஸ்ரேலை) இனங்கண்டு போராடுங்கள்!
உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி (இம்மையில்) வெற்றியாய் வரும்...
மறுமையிலும் அதுவே சொர்க்கமாக வரும்!