ISIS தீவிரவாதிகளினால் நாட்டுக்கு அச்சுறுத்தல் கிடையாது, ஆனால் முப்படையும் தயார் - பாதுகாப்பு அமைச்சு
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை குறித்து ஜனாதிபதியுடனும், பாதுகாப்புச் சபையிலும் கலந்துரையாடப்பட்டது.
துறைமுகம் மற்றும் விமான நிலைய பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவை எனக் கருதப்படும் இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு தரப்பினர் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாட்டின் தேசியப் பாதுகாப்பை முப்படையினர் முதனிலையாக கருதிச் செயற்பட்டு வருகின்றனர்.
தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமில்லை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் கிடையாது எனவும், சவால்களை எதிர்நோக்கத் தயார் எனவும் ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
We have a thread from extremist groups only.in srilanka
ReplyDeleteஇரன்டு நடிகர்கள் ஒன்ருசேர்ந்து எழுதியகதைக்கு சூட்டியபெயரே இலங்கையிலும் ISI தீவிரவாதம் இதுமுற்ருமுலுதாக இப்போதைய அரசியலை கைப்பற்ரி மீன்டும் ஆட்சிசெய்ய எடுக்கும் தீவிரவாதம் விழுந்தவன் எழுந்து நடக்க அடுத்தவன் காலை தடியாகபயன்படுத்தும் கதைமட்டுமே உன்மை அதற்கு இந்தநாட்டில் வாழும் தமிழ்முஸ்லீம் எனும்கால்கள்தான் சாடல்கலுக்கும் பாடல்கலுக்கும் சிறந்ததாகிவிட்டது அதைவைத்துதான் எழுவதும் வீழ்வதுமாகிவிட்டது இவர்கலது அரசியல் பிழைப்பு இருந்தாலும் அரசியல் ஹீரோக்கள் தமிழ் முஸ்லீம் மட்டுமே என்பது இவர்கள் கதையின் முடிவாக இருக்கும்
ReplyDelete