Header Ads



IS தீவிரவாதிகள் குறித்து, இலங்கையில் 24 மணித்தியாலமும் கண்காணிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர், முழு அவதானம் செலுத்தி வருவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பு அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய அரசு எனப்படும் குறித்த தீவிரவாதக் குழுக்களால் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் அவர்களது தொடர்புகள் குறித்து அண்மையில் வௌியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. with this....concern of BBS, Singha Lae, Vimal veeravansa, MR, Gotha, all other terrorists groups as well....

    ReplyDelete

Powered by Blogger.