தாய்லாந்து மாபீயா கும்பலுடன், மஹிந்தவுக்கு தொடர்பா..? - CID விசாரணை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த தாய்லாந்து மாபீயா கும்பல் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரச புலனாய்வுப் பிரிவினர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தாய்லாந்து மாபீபா கும்பல் தலைவரும் அவரது சகாக்களும் இலங்கைக்கு சென்றுள்ளதாக, அரச புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வத்ராவுடன் தொடர்புடைய இந்த மாபீபா கும்பல், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் நெருங்கிய தொடர்பு பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய் மாபீபா கும்பல் உலகின் முன்னணி மாபீபா கும்பல்களில் ஒன்றாக கருதப்டுகின்றது.
கடந்த அரசாங்கம் தாய் மாபீபா கும்பல் உறுப்பினர்கள் சிலருக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது என தெரிவி;க்கப்படுகிறது.
தாய் மாபீபா கும்பலின் இலங்கை வருகை தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எல்லாம் சிறு பான்மையை குறி வைக்கும் செயல்களே
ReplyDelete