Header Ads



வசீம் தாஜூடின் கொலை CCTV காட்சி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது, வழக்கு அடுத்தமாதம் ஒத்திவைப்பு

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை, பரிசோதனைக்காக வௌிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர் இன்று (07) நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவலளித்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க, குறித்த வீடியோ காட்சிகளை பரிசோதனை செய்த கொழும்பு கணனிப் பிரிவினர், அதனை வௌிநாட்டுக்கு அனுப்பி பரிசோதிப்பதே சிறந்தது எனக் கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி மேலதிக விசாரணைகளுக்காக இந்த சிசிடிவி காட்சிகளை அமெரிக்கா, கனடா அல்லது இலங்கிலாந்திலுள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த காட்சிகளை வௌிநாட்டுக்கு பரிசோதனைக்காக அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் அனுமதியளித்துள்ளார்.

மேலும், அது எந்த ஆய்வு கூடத்துக்கு அனுப்படவுள்ளது என்பது குறித்து இன்னும் ஒருவாரத்துக்குள் தெரியப்படுத்துமாறும், பின்னர் அதற்காக உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நீதவான் கூறியுள்ளார்.

இதேவேளை இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக விசாரணைகளை மேற்கொண்ட கிருளப்பனை மற்றும் நாரஹேன்பிட பொலிஸார் சிலரிடமும், இந்த விடயம் குறித்து முதலில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக, இரகசியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, முதலில் பிரேதப் பரிசோதனை செய்த கொழும்பு நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உள்ளிட்ட வைத்திய குழுவினர் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை வைத்திய சபையினால் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்

1 comment:

  1. Nothing will happened. deal is finished. this is lawless country,Law is only for common man but not for the politicians, that they can do what ever thing they want. no doubt colombo university under pressure not to continue the investigation and send it to foreign country.

    ReplyDelete

Powered by Blogger.