Header Ads



மைத்திரிக்கு Call எடுத்த மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது 2006 ஆம் ஆண்டு அவரைக் கொலை செய்ய முற்பட்டதாக தெரிவிக்கப்படும் நபருக்கு மன்னிப்பு வழங்கியிருந்தார். 

இந்த நிகழ்வை கண்டியில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். 

“ இது மிகவும் சிறந்த செயற்பாடு நீங்கள் இவ்வாறு என்னை பின்பற்றி செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

இதனால் சற்று நிலைகுலைந்த மைத்திரி “ நான் உங்களைப் பின்பற்றவில்லை என்னை கொலை செய்வதற்கு வந்த நபருக்கு அன்பு காட்டி அவரை விடுதலை செய்தேன்” என்று கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து வழமைபோன்று முன்னாள் ஜனாதிபதி வாய்விட்டு சிரித்துள்ளார். 

“கொலை செய்ய வந்தவரை நீங்கள் விடுதலை மாத்திரமே செய்திருக்கின்றீர்கள். என்னைக் கொலை செய்ய வந்தவரை விடுதலை செய்தது மாத்திரமன்றி அவருக்கு அமைச்சுப் பொறுப்பொன்றையும் வழங்கி நூறு மதுபானசாலைகளையும் அமைத்துக் கொடுத்து அவருடைய பரம்பரையே வாழ வைத்துள்ளேன்” என்று மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துளளார். 

அதன் பின்னர் “ ஜனாதிபதி அவர்களே..! எங்களுடை ஜொனி,  அவரை நாம் விடுதலை செய்தது மாத்திரமல்லாது அவரது ஏழு தலைமுறையை நாம் உயர்த்திவிட்டுள்ளோம். அவருடைய பைல் ஒன்று என்னிடம் இருப்பதாக தெரிவித்து அவர் தான் என்னை விட்டுப் போவதில்லை. எனவே நான் செய்ததை தான் நீங்கள் செய்கின்றீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சிரிப்புடன் மஹிந்த தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. ஒருத்தரை வாழவைக்க நூறு மதுபான சாலைகளைகளை வழங்கி அதனால் 100 000 குடும்பங்களையும் நாசமாக்கியுள்ளேன் என்று சொல்லியிருந்தால் இன்னும் அழகாகவும் உண்மையாகவும் இருந்திருக்கும்.
    நீங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊரிய அட்டைகள் தான்.
    தனது சுயநலத்துக்காக ஒருவர் சாமி போல் நடிக்கிறார். மற்றவர், தனது சுயநலத்தால ஆசாமியாகி மாட்டிக்கொண்டார்.
    முஸ்லிம்களே ரனிலின் election campaign க்கு பக்கபலமாக இருந்தவர்கள் David Cameroon க்கு பக்கமலமாக இருந்த அதே முஸ்லிம் விரோத கும்பல் தான். இந்த கூட்டு ஆட்சியின் மூலம் ( பெரும்பாண்மையை ஒன்றினைத்து) ஓரங்கட்டப்பட்டது முஸ்லிம்கள் தான்.
    இனி எந்த ஆட்சி வந்தாலும் முஸலிம்களுக்கு ஆப்பு நிச்சயம்!
    இனிமேலும் அற்ப இலாபங்களுக்காக அரசியல்வாதிகளுக்கு அல்லக்கைகளாகவும் , ஜால்ரா அடிப்பவர்காளாகவும் இருக்காமல் ஒன்றுபட முயற்சிப்போம். In sha Allah.

    ReplyDelete
    Replies
    1. Enter your reply... Maithry not actor.he is best humble politician.

      Delete
    2. @ Bro Aarif ! Wait and see. Time will tell you an answer.

      Delete

Powered by Blogger.