ஜனாதிபதிக்கு CALL எடுக்கலாம்
இலங்கை நாட்டில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.
“ஜனாதிபதிக்கு தெரிவிக்க” எனும் பெயரிலான இந்தச் சேவை எதிர்வரும் 8ம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. இந்த சேவையூடாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தேவைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவரலம்.
1919 என்ற இலக்கத்தினை எந்தவொரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளுடாகவும் அழுத்தி இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடிவும் என்பது விசேட அம்சமாகும்.
Grade job
ReplyDeleteஒரு நாள் முதல்வன் போல் பலவருடமுதல்வனாய் வழம்வந்து சேவைசெய்ய வாழ்த்துக்கள்
ReplyDeleteCall எடுத்து என்ன பயன்? செவிடன் காதில் உதிய சங்குபோல் இருக்கும்.
ReplyDeleteகண்ணால் கண்ட சம்பவங்களுக்கு இன்னமும் தீர்வு ஒன்றுமில்லை.
முஸ்லிம்களாகிய நாம் இந்த போலியான அஅரசியல்வாதிகளின் (all politicians are same ) சூழ்சிகளை நம்பிக்கொண்டு எங்களுக்குள் பிளவுகளை ஏறபடுத்திக்கொள்ளாமல் ஒன்று சேர வேண்டும்.
எடுத்தால் லைன் கிடைக்குமா பேசுவதற்கு
ReplyDeletecall pannitha parugelen 8th la
ReplyDelete