புதிய அரசியல் யாப்பிற்கான BMF விசேட கலந்துரையாடல்
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம், புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒன்றினை மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ் அரசியல் யாப்பு சீர்திருத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றினை நடாத்த ஏற்பாடுகளைச் சகோதரத்துவ ஊடகவியலாளர் ஒன்றியம் (BMF) ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இது தெடர்பான ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றவர்கள் தங்களது கருத்துக்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சகோதரத்துவ ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் L.A.U.L.M.நளீர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்றார்.
இக்கலந்துரையாடல் நடைபெறும் திகதி, இடம் விரைவில் அறியத்ததரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இதில் பெரும்பாலும் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனத்திற் கொள்ளவேண்டியுள்ளது.
இதன் அடிப்படையில், சில பரிந்துரைகளை தயாரித்து அதனை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Post a Comment