Header Ads



ஈராக்கில் இடம்பெற்ற பிரித்தானியாவின், அட்டூழியங்களை ஞாபகமூட்டும் கோத்தபாய

இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனை சந்தித்து உரையாடியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து கருத்துரைத்துள்ள கோத்தபய, 2009ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற பிரித்தானியாவின் அட்டூழியங்கள் குறித்து பொறுப்புக்கூறலை இன்னும் பிரித்தானியா நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டோனி பிளயர் முயற்சித்தார்.

இதற்காக பிளயர், வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபேன்ட்டை இலங்கைக்கு அனுப்பினார். எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அதிக நன்மைகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிளயரின் விஜயம் தனிப்பட்ட விஜயம் என்று குறிப்பிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், அவருடடைய சந்திப்புக்களை உயர்ஸ்தானிகரம் ஏற்பாடு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.