இலங்கையில் மீண்டும், உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கம் (வீடியோ)
இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை.
இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார்.
அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதை விட அதிக நிறையுடைய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல்லே இவ்வாறு தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
This is Blue Sapphire.(Neelam)Before one is Blue Star Sappire(Arunool). if before one is worth 300 million, this one no doubt could sell for more than 1000 million, if this stone complete clear and no crack in side.
ReplyDelete