Header Ads



மாடறுப்பது தடை என்ற மைத்திரிக்கு எதிராக, முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும் - அஸ்வர் குமுறுகிறார்

உள்நாட்டில் மாடறுப்பை மட்டுப்படுத்தி வெளிநாடுகளிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்தல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அஸ்வர்

இலங்கையில் மாடறுப்பது முழுமையாக இல்லாமற் செய்யப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக முஸ்லிம் அரசியல்வாதிகளும் இயக்கங்களும் புத்திஜீவிகளும் மக்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையில் அணிதிரள வேண்டுமெனவும் ஐக்கிய அணியாக ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம்களின் மார்க்க கடமைகளை விளக்க வேண்டுமெனவும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயாகலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் நாட்டில் மாடறுப்பை முழுமையாக இல்லாமற் செய்ய இறைச்சியையும் உணவுகளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு நிதி அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அதிர்ச்சிக்குரியதாகும். குர்பான், உழ்ஹிய்யா, அகீகா என்பன முஸ்லிம்களின் மார்க்க கடமையாகும். இந்தக் கடமைகள் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இஸ்லாம் கால்பதித்தது முதல் உள்நாட்டு வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மாடறுப்புக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை.

கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் குர்பான் கடமையின் போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மாடுகளை கொண்டு செல்வதற்கு (போக்குவரத்து செய்வதற்கு) பொலிஸார் கட்டுப்பாடுகள் விதித்தபோது முஸ்லிம் அரசியல்வாதிகளான நாம் பசில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுக்கு வந்தோம்.

பொலிஸ்மா அதிபர் இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்கு அனுமதி வழங்குமாறு விசேட சுற்று நிருபம் அனுப்பி வைத்தார். மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கிறது என்று கூக்குரலிட்டவர்கள் இன்று மௌனித்து இருக்கிறார்கள். இது கவலைக்குரியதாகும்.

அதனால் முஸ்லிம்கள் அனைவரும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக அணி திரள வேண்டும்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 comments:

  1. இவ்வாரு மஹிந்த சொல்லியிருந்தால் கழுவியிருப்பீர்கள்!

    ReplyDelete
  2. Dear aswar, this is not politics. Do You know islam ? You are thinking Without beaf there is no Islam ?. Meat is just a food. if we did not eat meat, we will not die and not ender to jahannam.meat is not a wajib in Islam. So please talk what are problem to the society. We know who are you.

    ReplyDelete
  3. I full support on this issue...but pls do not call ACJU...to joing or leading this issue...they are crook

    ReplyDelete
  4. கோழி ஒரு முட்டையிட்டுவிட்டு கூப்பாடு போடுவதுபோல்தான் இன்ரைய அரசியல்வாதிகளீன் அட்டகாசங்கள் ஆனாலும் இதில் ஒரு வெட்கம்கெட்ட விடயம் கோழியை விடமோசமானது இவர்கள் அதிகார பேச்சு அதாவது ஒரு முட்டையாவது இட்டுவிட்டு பேசினால் கூப்பாட்டிற்கு குரல் கொடுக்கலாம்

    ReplyDelete
  5. இலங்கை முஸ்லிம்களும் மாடறுப்பும்.

    பொதுப்பல சேனாவுக்கு ஆதரவானவர் மகிந்த என்று ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தஙர்கள் முஸ்லிம்கள் என்று மார்பு தட்டி இன்று அதேபொதுபல சேனா புனித குர்ஆன் மற்றும் சரியாவில் கைவைத்து அதன் அடாவடிகளை அரசியல் ரீதியாக நகர்த்தி இன்று மாடு உணவுக்காக மாடறுப்பது தடைசெய்யப்படும் என்ற நிலைக்கு நல்லாட்சி ஜனாதிபதியை கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை பார்க்கும்போது இந்த பொதுபல சேனாவின் அறங்காவலர்கள் யார்? என்ற ஒரு கேள்வி எம்முள்ளத்தில் எழுகிறது.

    அது ஒருபுறமிருக்க அன்பின் இஸ்லாமிய சகோதர்ர்களே சற்று நில்லுங்கள் சிந்தியுங்கள் நாம் மாட்டிறைச்சி சாப்பிடாவிட்டால் மெளத்தாக மாட்டோம், இந்த விடயத்தை பொறுமையுடன் அணுகுங்கள். மாடறுக்க வேண்டாம் என்ற தடை சட்டத்தை நல்லாட்சி அரசு அமுல் செய்ய வழி விடுங்கள் . எண்ணி ஒரு வருடத்தில் பெரும்பான்மை சமூகமே இந்த நல்லாட்சியை தூக்கி வீசுவர்கள்., பல இலட்சக்கணக்கான பெரும்பான்மை சகோதர்ர்களின் வாழ்க்கை ஓடுவது பண்ணை தொழிலை நம்பித்தான், ஆண்மாடுகளையும் பால்தராத பசுக்களையும் செலவு செய்து வளர்ப்பதா அல்லது வீதியிலே விடுவதா அல்லது அடித்து சாவடிப்பதா?

    முஸ்லிம்களாகிய நாங்கள் மாடறுக்க கூடாது என்ற சட்டத்தை ஆதரிப்பதால் ஒருவருடத்தினுள் முஸ்லிம்களின் காலைப்பிடித்து தயவு செய்து உணவுக்காக மாடுகளை அறுங்கள் என்ற நிலைக்கு இன்ஷா அல்லாஹ் அறியாமை கார்ர்களையை நிச்சயம் தள்ளும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

    மட்டுமல்லாது இது எமது நாட்டில் மாற்று மத மக்கள் இஸ்லாத்தினுள் நுளைய மாபெரும் சந்தர்ப்பம்.

    ஒரு வருடத்தின் பின் கட்டாக்காலி மாடுகள் எமது நாட்டில் கிட்டத்தட்ட 500,000 ஆகவும் இரண்டு வருடத்தில் அது 2.5 மில்லியனை எட்டும்,

    1. மாடுகளை அறுவைக்காக ஏற்றுமதி செய்வார்கள்

    2. வன விலங்கு இலாகா சுட்டு கொல்ல நேரிடும்

    3, அல்லது கட்டாக்காலி மாடுகளை பராமரிக்க வரவு செலவு திட்டத்தில் வருடமொன்றுக்கு 3000 மில்லியன்களை ஒதுக்கீடு செய்ய நேரிடும் .

    எனவே அறிவு ரீதியாக ஜனாதிபதியின் இந்த திட்டத்தை முஸ்லீம்கள் மனப்பூர்வமான முறையில் ஆதரிப்பதே சிறந்த வழி.... முஸ்லிம்களால். மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தை மாடுகளை வைத்து அரங்கேற்ற முடியம் ்

    ReplyDelete
  6. தீவிரவாத பௌத்த துறவிகளின் பிடியில் சிங்கள அரசியல் வாதிகள் சிக்கித்தவிக்கின்றார்கள் .இதிலிருந்து அவர்களையும் பாதுகாத்து நமது முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் புத்திஜீவிகளும் விவேகத்துடன் செயற்பட வேண்டும்

    ReplyDelete
  7. Mohamed Bawa

    வியப்பாகவிருக்கிறது. இப்படி அறிவுபூர்வமாக சிந்திப் பவர்களும் நம்சமூகத்தில் இருக்கிறார்கள் எனவறிய.
    இவளவு காலமும் எம்மவர் அஸ்வரைப்போன்றே உணர்வு பூர்வமாக

    சிந்திப் பவர்தாம் என்றிருந்தேன். வெளியே சொல்ல வெட்கம்.
    உங்ளைப்போன்ற ஓரிருவர் இருக்கிறார்கள் எனவறிய ஆறுதலாக மட்டுமன்றி பெருமையாகவுமிருக்கிறது.
    அல்ஹம்து லில்லா.

    ReplyDelete
  8. Mr Aswer do not mockar. we will face this issue.

    ReplyDelete
  9. So, the COWS will change the Goverment!!! and Cow is ruling the Human.

    ReplyDelete
  10. One valid reason to defeat this effort would be that future leaders will take this as a lead to hit Muslim's culture for
    political survival by satisfying racist's demand in the name
    of the majority.The govt is trying to introduce laws to curtail
    extreme Budhism and to counter mounting pressure against this
    effort , they are trying to hit Muslims to please the Monks.
    People who have no backbone to put up a brave face to their
    actions should better leave politics without creating more
    problems than solutions.

    ReplyDelete
  11. முகைதீன்பாவா என்னா தத்துவம்.... என்னா தத்துவம் இப்புட்டு அறீவான புள்ளயதானா இந்தவயிற்ருனுல் 10மாதம் சுமந்தன் என்ரு உங்கதாய் ரெம்பவும் சந்தோசபடுவா கொஞ்சம் படித்துகாட்டுங்க please

    ReplyDelete
  12. திரு.மொஹமட் பாவா உங்கள் கருத்துக்கள் மிகச்சரியானது! பாராட்டுக்கள்!

    ஆனால், உங்களை மேலே ஒருவர் எப்படிப் வியக்கின்றார் என்று பாருங்கள் :

    'முஸ்லீம்களில் உணர்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களும் இருக்கின்றார்களா?' என்று ஆச்சரியப்படுகின்றார்.

    அந்தளவுக்கு நம்மவர்கள் தமிழ் சினிமாவின் மசாலாப்பட இயக்குனர்கள் போல மூளையைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் சமூக மத விவகாரங்களில் நடந்துகொள்கின்றார்கள். எப்போதாவது யாராவது சிறிது மூளையுடன் சிந்தித்து நடந்துகொள்ளும்போது அவர்களைத் திட்டமிட்டுத் தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்ட முனைந்து நிற்கின்றார்கள்.

    இதுதான் நமது சமூகத்தின் சாபக்கேடு!

    ReplyDelete
  13. கருத்துக்கு பதில் சொல்லவேன்டியது பாவா ஆனால் நீங்கள்??காட்டிக்கொடுப்பது...........கூ.......கொடுப்பது இந்தவேலையுமா பார்க்கின்ரீர்கள் நாய்வால் எப்படிதான் சரியாகும்

    ReplyDelete
  14. அல்விசாத்,

    அது, நீங்கள் வசிக்கும் பிரதேசத்தின் கிராமசேவையாளர் உங்களுக்குத் தரும் விண்ணப்பப் படிவத்தில் தொழில் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் நீங்கள் எழுதவேண்டியது.

    ReplyDelete
  15. இந்த இனையத்தில் யார் இந்த தொழில் செய்ய முயட்சித்தாரோ அவரைதான் நான் சுட்டிகாட்டினேன் நான் அப்படியொருதொழிலும் செய்ய ஆசைபடவில்லையே....மாட்டிக்கிட்ட கல்வன் தப்பிக்க வழியின்ரி பிடித்தவன்தான் கல்வன் எனநிருபிக்க குருட்டுவழிதேடுவதுபோல் உள்ளது பாவம் பரிதாபம்......

    ReplyDelete

Powered by Blogger.