பாம்பு கொத்தியதால் ஆஜராகாத ரோஹிதவுக்கு, திருமணம் நடைபெற்றது எப்போது..?
மஹிந்தவின் ஆட்சியில் அமைச்சராக செயற்பட்ட ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோஹித்தவினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய அவரது திருமணத்திற்கு கிடைத்த சீதனம் தொடர்பிலே தகவல் வெளியாகியுள்ளது.
மேரி என் அபேகுணவர்தனவுடன், அபேகுணவர்தன திருமண பந்தத்தில் இணைந்த நாளாக 2004.11.21ஆம் திகதி என பதிவு செய்யபட்டுள்ளது.
திருமணத்திற்கு சீதமாக பணத்தில் ஆறு லட்சம், 85 ஆயிரம் பெறுமதியான நகைகள், பாணந்துரை - பின்வத்தை இலக்கம் 14 என்ற விலாசத்தில் அமைந்துள்ள ஜோன் கீல்ஸ் வீடு தொகுதியில் வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 1991.11.18ஆம் திகதி ரோஹித்தவுக்கு சீதனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமை ரோஹித்த அபேகுணவர்தன திருமணம் செய்துகொள்வதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே சீதனம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆணைக்குழுவினால் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு ரோஹித்தவை அழைத்த போது பாம்பு கொத்தி விட்டதாக விசாரணையில் ஆஜராகவில்லை.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு குறித்த விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கி விசாரணைகளை முழுமையாக மூடி மறைத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் 2006ம் ஆண்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment