Header Ads



உம்றா செய்வதற்கு, ஈரானியர்களுக்கு காலவரையின்றித் தடை


சவூதி அரேபியாவில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட ஷியா பிரிவுத் தலைவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரானில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தலைநகர் டெஹ்ரானிலுள்ள சவூதி தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டது.

 அதையடுத்து, ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது.

 பதிலுக்கு சவூதி பொருள்களை இறக்குமதி செய்ய ஈரான் தடை விதித்தது.

 இந்தச் சூழலில், யேமனிலுள்ள ஈரான் தூதரகம் மீது சவூதி அரேபியா விமானத் தாக்குதல் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

"உம்ரா' புனிதப் பயணத்துக்கு ஈரான் தடை

 ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக, தங்கள் நாட்டு மக்கள் சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்கு "உம்ரா' புனிதப் பயணம் மேற்கொள்ள ஈரான் தடை விதித்துள்ளது.

 அந்தப் புனிதப் பயணம், ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாகும். அந்தப் புனிதப் பயணம் மேற்கொள்ள தங்கள் நாட்டினருக்கு ஈரான் காலவரையின்றித் தடை விதித்துள்ளது

3 comments:

  1. அல்லாஹ் ரசூல் அனுப்பிய இஸ்லாத விட்டு வெளியேரியவர்கள் உங்கள் உம்ராவை அல்லாஹ் அங்கிஹரிக்கமாட்டான் உங்கள் சில பிதத்களை நம்மவர்கள் இஸ்லாம் என்று செய்து கொன்டிருக்கிரார்கள்

    ReplyDelete
  2. Unfortunately they strongly believe they are following the right path, let us pray for them.

    ReplyDelete
  3. Shia's honestly believe they are following the right path. So we should pray for them, for them to realize the truth. Rather than reacting to them in anger.

    ReplyDelete

Powered by Blogger.