சவூதி அரேபியாவில் உள்ள மையவாடி, கற்றுத்தரும் பாடம்..!
ரியாத்தில் உள்ள நஸீம் மையவாடிக்கு உடல்கள் அடக்கம் செய்ய பல முறை சென்றுள்ளேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடக்கம் செய்யப்பட்ட இறந்த உடல்கள்தான். உள்ளே நடந்து செல்ல முடியாது. வாகனத்தில்தான் செல்ல முடியும். அந்த அளவு விரிந்து பரந்த இடம் அது. ஆயிரக்கணக்கான உடல்கள் அடக்கப்பட்டுள்ள அந்த இடத்துக்கு சென்றாலே நமக்கு ஒரு வித மரண பயம் தொற்றிக் கொள்ளும்.
எனது நண்பன் வாகன விபத்தில் ரியாத்தில் இறந்த போது அல்ராஜி பள்ளியில் தொழுது விட்டு அடக்கம் செய்ய இந்த மையவாடிக்கு வந்தேன். எப்போதும் 15 அல்லது 20 குழிகள் வெட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கும். அன்றும் ஏழு அல்லது எட்டு உடல்கள் வந்தன. அவர்களின் சொந்தங்கள் தாங்கள் கொண்டு வந்த உடலை அடக்கி விட்டு எனது நண்பனின் உடலையும் தூக்கி குழியில் இறக்குவது பிறகு மண் தள்ளுவது போன்ற வேலைகளை தாங்களாகவே முன் வந்து செய்தனர். இறந்த அந்த உடலுக்காக பிரார்த்தனையும் செய்தனர். அனைவரும் செல்வ செழிப்பில் திளைக்கும் கோடீஸ்வர அரபுகள். நம் நாட்டில் இந்த வேலையை செய்பவர்களை 'வெட்டியான்' என்று சொல்லி அவனை தனி சாதியாக பாவிப்போம்.
அரபுகளில் எத்தனையோ கெட்டவர்கள் உள்ளனர். நான் மறுக்கவில்லை. அதே நேரம் அந்த அரபுகள் வழி வழியாக செய்து வரும் இஸ்லாம் போதித்த சில நல்ல பழக்கங்களை நாமும் கடை பிடிக்க பழகிக் கொள்வோம்.
-------------------------------
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5671, 6351
இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319
சுவனப் பிரியன் at 10:17 PMs
நீங்கள் கூறியது போல அரபிகளில் பல கெட்டவர்கள் இருப்பது போல உங்கள் ஊரில் வெட்டியான் என்று சொல்லலாம். நான் இன்றுதான் இப்பெயரை கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் கண்ட அநேகமான ஊர்களில் இவ்வேலை நன்மை கருதி போதுவாகேவே செய்யப்படுகின்றது. நீங்கள்தான் இப்போது இப்பெயரை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். சமூக வலைதளங்களில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு மக்களை பலவீனப்படுத்துவது பொருத்தமற்றது என நினைக்கின்றேன்.
ReplyDeleteஎனது கருத்தில் குறைகள் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும் சகோதரரே.
Well brother,
ReplyDeleteEven in our country , rich or poor all attend to Janaza related activity. I do not find anything extra ordinary here.