இலங்கை முஸ்லிம்கள் தம்மை, சீர்திருத்திக் கொள்வது கட்டாயம்..!
-Inaas-
இன்று பெரும்பாலானாவர்கள் சிங்களவர்கள் அனைவரும் இனவாதிகள் என்ற ஒரு தோற்றப்பாட்டை எம் மனதில் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் அது உண்மையல்ல..!
சிங்கள சமூகத்தில் பெரும்பாலானோர் இனவாதத்தை எதிர்ப்பவர்களே இலங்கையில் இன்று முக்கியமாக சிங்களவர்களில் 3 பிரிவினர்கள் இருப்பதாக கொள்ளலாம்.
1. இனவாத சிங்களவர்கள்
2. இனவாதிகளுக்கு எதிரான சிங்களவர்கள்
3. அப்பாவி சிங்களவர்கள்
நம்மில் பெரும்பாலானவர்கள் இனவாத சிங்களவர்களை எதிர்ப்பதிலும் அல்லது அவர்களுக்கு பதிலளிப்பதிலுமே காலத்தை வீணடிக்கின்றனர்.
அதிலும் பெரும்பாலானவர்களின் செயற்பாடுகள் 2ஆம் 3ஆம் தரப்பினரையும் இனவாதிகளாக மாற்றும் செயற்பாடுகளாக இருப்பதனையே காண முடிகிறது.
இனவாதிகள் மீது கவனம் செலுத்துவதனை குறைத்துக்கொண்டு மற்ற இரண்டு தரப்பின் மீதான எமது கவனத்தை குவிப்பதன் மூலமும் இனவாதத்தை தூண்டும் எமது இனவாத நடவடிக்கைகளையும் நாம் தெளிவாக இனங்கண்டு நாம் செயற்படுவோமேயானால் இன்ஷாஅல்லாஹ் நல்ல விளைவுகளை நாம் எதிர்ப்பார்க்கலாம்.
குறைந்தது எமது வாகனங்களில் நாம் ஒட்டியிருக்கும் அரபு வாசகங்களை நீக்கிக்கொள்ளலாம். இப்படி அரபு வாசகங்களை எமது வாகனங்களில் ஒட்டிக்கொள்ளவதால் வாகனத்துக்கோ எமக்கோ எந்த நன்மையும் நேரப் போவதில்லை. ஆனால் அதனை ஒட்டாமல் விடுவதால் ஓரளவு இனவாதம் தூண்டப்படுவது குறையலாம்.
அது மட்டுமல்ல, நாம்விடும் இன்னுமொரு மகா தவறு. பிரதான வீதிகளில் அமைந்துள்ள மஸ்ஜித்களில் ஜூம்ஆ தொழுகையின் போது பிரதான வீதியை முழுமையாக மூடிவிட்டு தொழுவது.
கொழும்பு நகரில் இது சர்வசாதாரணம், இதனால் நாம் தொழுது முடியும் வரை
வாகனங்கள் அனைத்தும் வீதியில் காத்திருக்க வேண்டிய நிலை.
ஒரு அந்நிய மதத்தவர் இப்படியான நிலையில் Traffic இல் சிக்கிக்கொள்வதால்
நிச்சயம் அவர்கள் இனத்தை பயன்படுத்தியே எம்மை திட்டுவார்கள். இதனாலும் இனவாதம் தூண்டப்படுவது தவிர்க்க முடியாது
இவை மிகச் சிறிய உதாரணங்கள் மாத்திரமே. இவைகளிலிருந்து நம்மால் இலகுவாக தவிர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் நாம் இப்படியான சிறுவிடயங்களிலிருந்தாவது நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளும் பணியை உடனடியாக ஆரம்ப்பிக்க வேண்டும்
மிக அருமையான பதிவு.
ReplyDeleteஇதோடு சேர்த்து தெருவுக்கு தெரு தேவையில்லாமல் பள்ளிகட்டுவதையும் அரபு பணங்களைக் கொண்டு வந்து மாடறுப்பதையும் நிறுத்த வேண்டும்.
koil katu kaati koduppanuku mohamed name oru keda
Deleteஇவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை எல்லாம் இஸ்லாம் என்று பின்பற்றிய விளைவுகள்தான் இவ்வாறான இனப்பிரச்சினைக்கு காரணம்.வாகனங்களில் ஆயத்துல் குர்ஷி அல்லது வேறு ஏதாவது வசனங்களை ஒட்டுவதால் எந்த பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை இதை வாகனத்தில் ஒட்டிக்கொண்டு நல்ல சினிிமா பாடலை போட்டுக்கொண்டு தானும் சேர்ந்து பாடிக்கொண்டு போவது .இதுவா இஸ்லாம் பள்ளிப்பக்கம் மழைக்கும் ஒதுங்குவது இல்லை இஸ்டீக்கர் ஒட்டி என்ன பலன்
ReplyDeleteஇதுபோல நூறு விடயங்களைக் கூறலாம். நம்மவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் மத அனுஷ்டான விடயங்களில் உள்ளுர ஒருவகை உயர்வுச்சிக்கல்களைக் கொண்டவர்களாக தம்மைக் காண்பித்துக்கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் நம்மைப்பற்றிய தப்பபிப்பிராயங்கள் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் நன்மைகள் விளையப்போவதில்லை!
ReplyDeleteQuran and Hadith eduppaar kaippillaiyaagi vittazu . Ovvoru
ReplyDeleteiyakkamum Islaaththukku puzuppuzu arththangalaik koduththu
pozu makkalai sinnapinnap paduththik kondirukkiraargal enbazu
mattumthaan unmai nilai. Izu ippoazu oru tholilaaga nadakkuzu
enbazuthan innoru unmai. Ivargalai nambuginra makkalai theendi
theendi pilaippu nadaththik kondirukkinraargal . Makkal
puththiyai theettikkolla vendiya kaalam izu.
We should try understand the culture of neighbours, and learn to respect their concerns. As humans we have many things to share , which we should share.
ReplyDeleteThis problem has emerged in our society only after these Saudi agents of Wahhabism were imported to srilanka , theses narrow minded Wahhabis always try cultivate hatred among the peaceful community in order to create problems between brothers and sisters of one nation .
ReplyDeleteதம்பி முகம்மட் உங்களைப்போன்று பெயர் வைத்துக்கொண்டு பள்ளிவாசல் பக்கம் தலைவைக்காமல் இனையத்தில் மட்டும் இஸ்லாம் பாடம் நடத்தும் உங்களைப்போன்றோர் திருந்தட்டும் என்றுதான் தெருவுக்கு தெருவும் பள்ளிகளைக்கட்டி அதானை கூறீ அழைப்பது அதுக்கு நீங்கள் ரெடியில்லையென்றால் பொத்திட்டு இருங்க.......இப்படி அலகிய பெயரையாவது நாறடிக்காமல்..
ReplyDelete