Header Ads



விளாடிமிர் புடினின் நாயை கண்டு அஞ்சிய ஏஞ்சிலா மெர்க்கல்

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் மீது ரஷ்ய ஜனாதிபாதியான விளாடிமிர் புடின் தன்னுடைய வளர்ப்பு நாயை விட்டு மிரட்டியதாக வெளியான புகார்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் முதன் முதலாக பதவியை ஏற்றபிறகு, ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் நடந்துள்ளன.

2007ம் ஆண்டில் நடைபெற்ற இந்த முதல் சந்திப்பில், அறைக்குள் வந்த புடின் தன்னுடைய வளர்ப்பு நாயான கோனியையும் அழைத்து வந்துள்ளார்.

ஏஞ்சிலா மெர்க்கலிற்கு இயற்கையிலேயே நாய்கள் என்றால் பிடிக்காது. ஒருவித அச்சமும் நாய்கள் மீது அவருக்கு ஏற்படும்.

இந்நிலையில், தனி அறைக்குள் இரு நாடுகளின் தலைவர்கள் அமர்ந்துள்ளபோது, உள்ளே வந்த நாய் ஏஞ்சிலா மெர்க்கல் அருகில் சென்று அவரை நுகர்ந்து பார்க்கிறது.

பின்னர், அவருக்கு அருகில் அமர்ந்துவிடுகிறது. இந்த காட்சியை கண்டு ஏஞ்சிலா மெர்க்கல் புன்னகை செய்தாலும், மனதுக்குள் நாய்கள் மீதான அச்சம் இருப்பது இந்த புகைப்படங்களில் நன்றாகவே தெரிகிறது.

இத்தனையையும் பார்த்து புடின் ரசிப்பதாக புகைப்படங்கள் அப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அண்மையில் செய்திகாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘நாய்கள் மீது ஏஞ்சிலா மெர்க்கல் அவர்களுக்கு அச்சம் இருப்பது எனக்கு நிச்சயமாக தெரியாது'.

மேலும், ஏஞ்சிலா மெர்க்கலை அச்சுறுத்தவோ அல்லது அவமதிக்கவோ திட்டமிட்டு நாயை அங்கு அழைத்து வரவில்லை’ என புடின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


1 comment:

  1. இதெல்லாம் ஒரு செய்தியா..?

    ReplyDelete

Powered by Blogger.