உரத்துக் கத்தினேன் - சந்திரிகா
யாழ்.நவாலித் தேவாலயத்தின் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதான செய்தியை அறிந்தபோது நான் இராணுவத்தினரையும் விமானப் படையினரையும் நோக்கி உரத்துக் கத்தினேன். இந்தத் தாக்குதல் ஒரு தவறு. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
எது எப்படியிருந்தாலும் அதற்கு விமானப் படையினரும் இராணுவத்தினரும் அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழிலிருந்து வெளிவரும் பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி:- 1995ம் ஆண்டு உங்களுடைய ஆட்சிக் காலத்தின்போது யாழ்.நவாலித் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு எப்படியாகப் பொறுப்புக்கூறப் போகின்றீர்கள்?
பதில்:- போரின் போது நவாலி மட்டுமன்றி மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றன. போரின் போது நிறைய விடயங்கள் இடம்பெறுவதுண்டு. பதவியிலுள்ள அரசு அதற்கான பொறுப்புக்களை ஏற்கவேண்டும். இந்தச் சம்பவம் (நவாலி தேவாலயத்தின் மீதான விமானத் தாக்குதல்) தொடர்பாக அறியத்தந்த வேளையில் நான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டமொன்றில் பங்குபற்றிக்கொண்டிருந்தேன்.
உண்மையில் நான் இராணுவத் தரப்பினரையும் விமானப் படையினரையும் நோக்கி உரத்துக் கத்தினேன். இந்தத் தாக்குதல் ஒரு தவறு. சிறிய முகாம் போன்று விடுதலைப் புலிகள் ஒன்று கூடுமிடத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் எண்ணியிருந்தனர். அதற்கருகில் அப்படியொன்று இருந்தது. ஆனால், அவர்கள் தமது இலக்கைத் தவறவிட்டு தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர். அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்ன இடம்பெற்றிருந்தாலும் விமானப்படை, இராணுவம்,அரசு அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
கேள்வி:- இந்த அரசுக்கு வாக்களித்த போது தமிழ் மக்கள் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வருதல், காணிகளை விடுவித்தல் போன்றவை முக்கிய இடம்பிடித்திருந்தன. அரசானது அடையாளத்திற்காக சிலரை விடுவித்துள்ளது. சில தொகுதிக் காணிகளை விடுவித்துள்ளது. ஆனால், காணிகளில் பெரும்பலானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதுபற்றிய உங்கள் பதில் என்ன?
பதில்:- இது விடயத்தில் கடந்த திங்களன்று (18.01.2016) இராணுவத்தினருடன் நான் தொடர்புகொண்டு வினவியிருந்தேன். இராணுவத்தினர் வசம் யாழ்.குடாநாட்டில் 11,700 ஏக்கர் காணித்துண்டுகள் இருந்தன. இதில் 7000 ஏக்கர்களை இதுவரையில் அவர்கள் மீளவும் உரியவர்களிடம் திரும்பக் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதியால் அண்மையில் 700 ஏக்கர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமையே விடுவிக்கப்பட்ட கடைசித் தொகுதிக் காணிகளாகும்.
தற்போதைய நிலையில் இராணுவத்தினர் வசம் 4600 முதல் 4700 ஏக்கர் காணிகளே உள்ளன. இது பாதுகாப்புக் காரணங்களுக்கு அவசியமானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதிலும் 700 ஏக்கர் வரையான காணிகளை விடுவிக்க முடியும் எனத் தகவல் தரப்பட்டுள்ளது.
அப்படிப் பார்க்கையில் 11,700 ஏக்கர்களில் இருந்து 4000 ஏக்கர்களாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் பரப்பளவு குறைந்துள்ளது.
கேள்வி:- கருணா, பிள்ளையான் போன்றவர்கள் வெளியில் இருக்கையில் இன்னமும் விடுவிக்கப்படாமலுள்ள அரசியல் கைதிகள் பற்றி?
பதில்:- கருணா பிள்ளையானை விடுவித்தது எமது தவறல்ல. மஹிந்தவே அதனைச் செய்திருந்தார்.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிலர் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதனைத் தவிர நூற்றுக்கும் குறைவான இன்னுமொரு தொகுதிக் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படக் கூடியதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்தக் கைதிகளை விடுவிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எந்த வழக்குகளும் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்க முடியும்.
போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் எனத் தமிழ் மக்களான நீங்கள் கேட்கின்றீர்கள். அப்படியானால் பிரபாகரனின் படையினர் ஏன் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படக்கூடாது எனக் கேட்கின்றேன்.
மக்களைக் கொன்றமைக்காகவே அவர்கள் சிறைகளில் உள்ளனர்.
இராணுவத்தினரை மாத்திரம் ஏன் தண்டிக்க வேண்டும். ஏன் பிரபாகரனின் படையினர் தண்டிக்கப்படக்கூடாது.

செல்லம் நீங்கள் றூமுக்குள் இருந்து கத்தி என்ன பிரயாே சனம்..நீங்கள் கத்துவதற்கு முன் தமிழ் மக்கள் கதறி கத்தியது உங்கள் காதிற்குள் விழ வில்லையா?
ReplyDeleteமஹிந்த மஹத்தயா வந்து இறுதி யுத்தத்தில் நான் எகிப்தில் இருந்தேன்...... அப்போது மைத்ரீதான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் அதனால் எல்லாவற்றுக்கும் அவர்தான் பொறுப்பு, நான் நடந்தவற்றுக்காக மைத்ரீயை பார்த்து உரத்து கத்தினேன் என்று சொன்னால் எல்லாம் சரியாகிடுமா? மேடம்!!!
ReplyDelete