Header Ads



பிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்து வெளியேற்றபட்டார்

கனடா நாட்டில் தோழி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு சென்றுருந்த இஸ்லாமிய மாணவி ஒருவரை முகத்திரை காரணம் காட்டி வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள Brossard என்ற நகரில் பல்லேடிய அரங்கம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு குறிப்பிட்ட ஒரு கட்டணம் செலுத்தி பிறந்த நாளை உற்சாகமாக நண்பர்களுடன் கொண்டாடலாம்.

இந்நிலையில், இதே நகரை சேர்ந்த Hoda Mady என்ற இஸ்லாமிய மாணவி ஒருவர் தன்னுடைய தோழி ஒருவரின் பிறந்த நாளிற்காக நண்பர்களுடன் பல்லேடியம் சென்றுள்ளார்.

அரங்கிற்குள் உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாட தொடங்கியபோது, அங்குள்ள வாடிக்கையாளர் ஒருவர் மாணவியை நோக்கி வேகமாக வந்துள்ளார்.

‘இந்த அரங்கிற்குள் தொப்பி அணிய அனுமதியில்லை. எனவே நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்’ என கூறியுள்ளார்.

இஸ்லாமிய மாணவியான அந்த பெண், முகத்திரையை வித்தியாசமான முறையில் ஒரு தொப்பி போல் அணிந்திருந்தார்.

‘இது தொப்பியில்லை. இஸ்லாமியர்கள் அணியும் முகத்திரை. இதனை நான் விலக்க முடியாது’ என அந்த மாணவி மறுத்துள்ளார்.

அப்போது அந்த அரங்கில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் விரைந்து வந்து அந்த வாடிக்கையாளருக்கு ஆதரவாக மாணவியை எதிர்த்து பேசியுள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரும் அவமானம் அடைந்த அந்த மாணவியும் நண்பர்களும் அரங்கத்தில் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, பல்லேடியத்தின் மேலாளர் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

’இந்த அரங்கத்திற்குள் தொப்பி அணிந்து வர தான் தடை இருக்கிறதே தவிர இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய தடையில்லை. எனினும், வாடிக்கையாளர் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. முகத்திரை அல்ல ஹிஜாப் அல்லது தலை மறைப்பு,என்ற தமிழ் சொல் சிறந்தது.

    ReplyDelete
  2. முகத்தை மூடுவதற்கும் மார்க்கத்துக்கும் தொடர்பு இல்லை. வலிந்து கொடுக்கப்படும் விளக்கங்களும், அரேபிய திணிப்புமே பிரச்சினைக்கு மூல காரணம்.

    முகம் மூடினால் ரொம்பப் பக்தியானவர்கள், சாலிஹானவர்கள் என்று நம்பப்பட்ட, அதனை நம்பி விரைவாக திருமணம் முடித்து கொடுத்துவிடலாம் என்று நம்பிய ஒரு காலமும் இருந்தது, இப்பொழுது அந்தக் காலம் மலையேறிவிட்டது.

    முகம் மூடி பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டு, அதை மார்க்கத்தில் திணிப்பது மார்க்கத்தையே இழிவு செய்வது போன்றது ஆகும்.

    ReplyDelete
  3. Br.hassen, அப்போ அன்றைய ஸஹாபிப் பெண்களும், நபியின் மனைவிமார்களும் கடைபிடித்தது இஸ்லாத்துடன் தொடர்பில்லாததைத்தானா,,?
    கைக்கு வருவதையெல்லாம் எழுத வேண்டாம். உங்கள் கரங்களே நாளை மறுமையில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லுக்கு.

    உண்மையில் பிறந்த நாள் விழா கொண்டாடுவது இஸ்லாத்திற்கு முரணான செயல். அந்தப் பெண் அங்கு போக வேண்டிய அவசியமே இல்லை


    ReplyDelete
  4. அரபு கலாச்சாரம் வேறு, இஸ்லாம் வேறு, போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

    சஹாபா பெண்மணிகள் செய்த எல்லாமே மார்க்கம் அல்ல. வஹி மட்டுமே மார்க்கம்.

    ReplyDelete

Powered by Blogger.