கொழும்பில் முஸ்லிம் கல்வி, தொடர்பான ஆய்வு கருத்தரங்கு
அடுத்த கால் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி விரிவான ஆய்வு ஒன்றை நடத்த அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு தீர்மானித்துள்ளது.
றாபிதத்துல் நளீமியுடன் இணைந்தே இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தரம் மற்றும் பௌதீக வளங்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை முடிவுகளை தேசிய மட்டத்துடன் ஒப்பிடுதல், பாடசாலைகளிலிருந்து மாணவர்களது வெளியேற்றம், பாடசாலைக்குச் செல்லாத மாணவர்கள், பலவந்தமாக இடம்பெயர்ந்த சமூகத்தின் கல்வி நிலை, பாடசாலை மாணவர்களின் கல்வி, தொழில்நுட்ப, தொழில்கல்வி வாய்ப்புக்கள், பல்கலைக்கழகங்களுக்கு குறைந்த மாணவர் அனுமதி, அதனை அனுமதிப்பதற்கான தகுதிகள்,
தனியார் கல்வி பங்களிப்பும் சவால்களும், மத்ரஸா கல்வி என்ற தலைப்புகளில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பான முன்னோடிக் கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஏ.ஜி ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெறும்.
நாட்டின் முன்னணி முஸ்லிம் கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்வதாக முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயலாளர் ரஷீத் எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
Post a Comment