Header Ads



ஈரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கம், புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என்கிறார் ரௌஹானி

இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார்.

சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன.

இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து அனைவரும் மகிழ்கின்றனர் எனக் கூறும் இரானிய அதிபர், தமது பிராந்தியத்தில் போரை விரும்பும் சிலர் மட்டுமே இதை எதிர்த்துள்ளனர் எனக் கூறுகிறார்.

இஸ்ரேலும், அமெரிக்க நாடளுமன்றத்தில் உள்ள கடும்போக்கு சிந்தனையாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அச்சுறுத்தல் இப்போது குறைந்துள்ளது என்றாலும், தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

9 comments:

  1. புதிசா என்ன அத்தியாயத்தினை திறக்கப்போகின்ரீர்கள் ஒருபடி மேலே போய் உங்க சியா சிந்தனையைதான் ஊக்குவிக்கப்போகின்ரீர்கள் அந்த குதுகலபேச்சுதான் இது

    ReplyDelete
  2. வேறு ஒன்றுமில்லை விசாத்! எதிரிக்கு எதிரி நண்பன். இதனால் MiddleEast petrol business ஐயும் share market ஐயும் நிலைகுலைய வைப்பதுதான் அமெரிக்காவினதும் அவனின் அல்லக்கையான இஸ்ரேலினதும் திட்டம்.

    ReplyDelete
  3. Mr. Rawhani... Turn you and your people toward TAWHEED the pure form of Islam which was practiced by Muhammed (sal) and his companions. Respect the all the Qulafaaur rashideens and the all companions of Muhammed (sal) and Respect the Ummuhaathul Muhmineens Aesha and Hafsha (ral). Stay away from equating your Imaams with the qualities of Allah.

    If you do all.. we will be with you insha Allah.

    ReplyDelete
  4. ஈரான் இஸரேல் அமெரிக்கா இம்மூன்றும் முழு உலகையும் முற்றுகையிட்டுள்ளன.முஸ்லீகளை வழிகெடுக்க ஈரானின் ஷீஆ யிஸமும் அரபுகளின் நிலத்தை அபகரித்து அகன்ற இஸ்ரேலை நிறுவ இரேலும்,புதிய உலக ஒழுங்கு என்றபோர்வையில் முஸ்லீம்களை கருவறுக்க அமெரிக்காவுமாக தமது பணியினை சிறப்பாக செய்கின்றனர்.

    ReplyDelete
  5. ஈரானின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு இது ஒரு வயிற்றெரிச்சல்தான்.

    ReplyDelete
  6. எஹ்திகளின் உற்ற நன்பன் நீங்கள்தான் பொருல்லாதார தடை நீக்கம் உலகம் இஸ்லாமிய மயம் ஆகுதை தடுக்க முடியாது இஸ்ராயிலுக்கு முஸ்லீம் நாடுகளை பிடிக்க உதவியகர்கலும் நீங்களே மத்ஹப் என்ர பெயரில் பித் அத்களை புகுத்திய காபீர்களே

    ReplyDelete
  7. Siaa and sunni will fight each other.our eneimes will ge t beneifit

    ReplyDelete
  8. யார் இந்த முஹம்மத் ஈரானின் அடிவருடியா சியா காபீர்களுக்கு வக்காலத்து வாங்குவது

    ReplyDelete

Powered by Blogger.