Header Ads



வடக்குகிழக்கு முஸ்லிம்களை, தமிழர்களுக்கு அடிமைகளாக்கி விடாதீர்கள்

எஸ்.எம்.இஹ்ஸான் (மாவடி)

தமிழர்களுடைய கடந்தகால நடத்தைகளும் முஸ்லிம்களுடைய கசப்பான அனுபவமும் முஸ்லிம்களினுடைய தனியான அதிகாரப்பகிர்வூக் கோரிக்கைக்கு முஸ்லிம்களைத் தள்ளியது என்பதனை யாரும் மறுதலிக்க முடியாது. வடகிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற முஸ்லிம்களின் உயிர்களையூம், மதச்சுதந்திரத்தையூம்இ கலாச்சாரத்தையூம், தனித்துவத்தையூம் பேணிப் பாதுகாக்கக்கூடிய ஒரே வழி இருக்குமாக இருந்தால் அது அவர்களுக்கான அதிகாரப்பகிர்வூக்கான தனியான அமைப்பேயாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.

இன்று ஆட்சியிலுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கம் தமிழர்களுடைய பிரட்சினையைத் தீர்ப்பதற்கான யோசனையைக் கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களை தமிழர்களினுடைய ஆதிக்கத்தின் கீழ் தமது அரசியல், சமூக அடிமைகளாக மாற்றிவிடக்கூடாது என்பதில் எமது அரசியல் தலைமைகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது வரலாற்றில் ஒரு இக்கட்டான காலகட்டமாக அரசியல் விமர்சகர்களால் சித்தரிக்கப்படுகின்ற இத்தருனத்தில் நல்லாட்சிக்கான இவ் அரசாங்கமும் முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைக்காது என நம்பி எமது அரசியல் தலைமைகள் தூங்கிவிடக்கூடாது.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்காக ஒரு அரசியல் தீர்வூ வழங்கப்படுமாக இருந்தால் அது வடகிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சாத்தியமாகும். ஏன் என்றால் இங்குதான் பெரும்பான்மையாக வாழுகின்ற சிறுபான்மையினர் வாழுகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்களும் முஸ்லிம்களும் மற்றும் பெரும் தொகையான தமிழ் மக்களும் வடகிழக்கு மாகாணங்களின் இணைவை எதிர்க்கின்றார்கள் என்பது உண்மை.

இலங்கையில் உள்ள சிங்களவர்கள் மற்றும் தமிழர்களைப் போல அதிகாரப் பகிர்வொன்று நடைபெறுகின்ற சமயம் முஸ்லிம்களுக்கென்று ஒரு முஸ்லிம் பெரும்பான்மையினைக் கொண்ட பிராந்திய சபையைத்தான் முஸ்லிம்கள் கோரிநிற்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இல்லாத காரணத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஒரு தனியான பிராந்திய சபை உருவாவதனை இங்குள்ள தமிழ் மக்கள் விரும்பாமல் இருக்க முடியாது. அதே போன்று வடமாகாணத்தில் முஸ்லிம்கள் பெருமாபான்மையாக இல்லாத காரணத்தினால் வடமாகாணத்தில் ஒரு தணியான பிராந்திய சபை உருவாவதனை அங்குள்ள முஸ்லிம்கள் விரும்பாமல் இருக்க முடியாது. அதே போன்று இந்த இரண்டு மாகாணங்களில் வாழுகின்ற சிங்கள மக்களும் விரும்பாமல் இருக்க முடியாது.

இந்த நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் அமைகின்ற அதிகாரப்பகிர்வூ அலகுகள் நிலமைக்குப் பொருத்தமானவையாகவூம் இந்த மாகாணங்களிலே பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழர்களினதும்,முஸ்லிம்களினதும் தனியான இனத்துவ உரிமைகளையூம், வரலாற்று ரீதியான வாழிடங்களையூம் பாதுகாப்பவையாகவூம் விளங்கவேண்டியதும் அவசியமாகும். அதுமாத்திரமன்றி தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதிகாரப்பகிர்வூ அலகுகளை உருவாக்குகின்ற போது கிழக்கு மாகாணத்தையூம் வடமாகாணத்தின் வேறு பிரதேசங்களையூம் தமது தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிடக்கூடாது.

இலங்கையில் வாழுகின்ற சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவருக்கும் மனக்கசப்புக்கள் இருக்கின்றன. இனத்துவ மனக் கசப்புக்களானது ஒரு சமூகத்தை அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தோருக்கு மாத்திரம் உரித்தானதொன்றல்ல. இனத்துவ மனக் கசப்புக்களைத் தீர்ப்பதற்குப் பல்வேறு அரசியல் தீர்வூகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்பிரேரனைகள் அனைத்திலுமுள்ள பொதுவான விடயம் அதிகாரப்பகிர்வூ மாத்திரம்தான். இக்கால கட்டத்தில் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களாகிய நாங்கள் கௌரவமாக வாழவேண்டுமானால் எமது பாரம்பரிய வாழிடம், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் மார்க்க விடயங்கள், கலாசாரம், மொழி ஆகியவற்றுக்கு உறுதியான பாதுகாப்பை வலியூறுத்தக்கூடிய நிலையான தீர்வூத்திட்டத்தை மாத்திரமே விரும்பியாக வேண்டும்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாகவூம் தமிழ் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாகவூம் வாழுகின்ற இலங்கையினுடைய 07 மாகாணசபைகளை சிங்கள மக்கள் தன்னகத்தே வைத்துள்ள போது. அதேபோன்று சிறுபான்மையிற் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்கள் தமக்கென்று ஒரு திடமான சபையை வைத்திருப்பதனைப் போன்று இரண்டாம் நிலைச் சிறுபான்மையான முஸ்லிம்களும் தீர்வூத்திட்டம் வருகின்ற போது இந்த நாட்டிலே பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற கிழக்கிலே தங்களைத் தாங்களே ஆழுகின்ற ஒரு நிலையான அதிகாரத்தைக் கோருவதில் எந்தத் தவறும் இருக்கப்போவதில்லை. இந்த வகையில் தமிழர்களுடைய தீர்வூத்திட்டத்துக்காக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிக இனைக்கப்பட்டு தற்போது பிரிக்கப்பட்டுள்ள வட கிழக்கு மாகாண சபைகள் இனைக்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்களுக் கென்று முஸ்லிம்கள் கோருகின்ற நிலத்தொடர்பற்ற தென்கிழக்கலகு என்று ஒன்று உருவாகாமல் வடகிழக்கு மாகாணங்களின் இணைவை இங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள்.

ஏன் என்றால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி தற்காலிகமாக வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மாகாண சபைகள் நிறுவப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்,தமிழ் இயக்கங்களினால் கொல்லப்பட்டும், காயமேற்படுத்தப்பட்டும் உள்ளனர். 1989-90 காலப்பகுதிகளில் சுமார்200,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாயினர். 1989 ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் ரீ.என்.ஏ இனர் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களை ஏக காலத்தில் தாக்கியபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர்.

அதேபோன்று நவீன ஆயூதங்களுடனும் மற்றும் முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாணசபை முதலமைச்சரினால் வழங்கப்பட்ட யூத்த உபகரணங்களைக் கொண்டும் காரைதீவூ பொலிஸ் நிலையத்தை சுற்றிவழைத்த ரீ.என்.ஏ இரானுவத்தினர் தமிழ் பொலிசாரையூம் முஸ்லிம் பொலிசாரையூம் தரம் பிரித்து முஸ்லிம் பொலிசாரைக் கொண்றதையூம் அதேபோண்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் சுற்றிவழைக்கப்பட்டு அங்கிருந்த முஸ்லிம், சிங்கள பொலிசாரைக் கடத்திச்சென்று கொலைசெய்து எரித்ததையூம், காத்தான்குடிப் பள்ளிவாயற் படுகொலை, மற்றும் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்று வீடு திரும்பிட முஸ்லிம்களை வெட்டிக் கொண்றது, மாத்திரமன்றி இன்னும் இன்னும் எத்தனையோ துயரச் சம்பவங்களையூம் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டதனை மறக்கவூம் மறுக்கவூம் முடியாது.

இதனால் தான் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களும் தீர்வூத்திட்டம் ஒன்று வருகின்ற சந்தர்ப்பத்தில் தங்களைத் தாங்களே ஆழுகின்ற நிலையானதும் நேர்த்தியானதுமான முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓரு தீர்வை எதிர்பார்க்கின்றனர். தமிழீல யூத்தத்தின் காரணமாக வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இந்தியாவூக்கும், வேறு நாடுகளுக்கும் அகதிகளாய் குடியேறினர். அப்படி இருந்தும் முஸ்லிம் மக்கள் தமிழீல விடுதலைப் புலிகள் அமைப்பினால் தங்களது பூர்வீக இடங்களைவிட்டு விரட்டுப்பட்டும் கூட எந்தவொரு முஸ்லிமும் அரபுநாடுகளுக்கும் அகதிகளாகச் செல்லவூமில்லை அதேநேரம் தங்களை வெளியேற்றிய தமிழீல விடுதலைப் புலிகளுக் கெதிராக போரிடும் முயற்சியில் இரானுவப்பயிற்சி பெறவூம் செல்லவில்லை. வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளம், குருநாகல், அனுராதபுரம், மற்றும் கண்டி போண்ற மாவட்டங்களில் தான் அகதிகளாக பல இன்னல்களை அனுபவித்தவர்களாக வாழ்ந்தார்கள். இன்னும் அகதிகளின் குடியேற்றம் முற்றுப் பெற்றதாய் இல்லை.

முஸ்லிம்களாகிய நாங்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் இலங்கையினுடைய சட்டங்களைத் தாண்டி உரிமைகளை அதிகமாகக் கேட்டதுமில்லை, நாங்கள் பிரிவினை என்ற ஒன்றைக் கோரவூம் இல்லை,எங்களது மனக் கசப்புக்களைத் தீர்ப்பதற்காக பயங்கரவாத வழிகளையூம் நாடவூம் இல்லை, மாறாக முஸ்லிம்களாகிய நாங்கள் எதிர்பார்த்துக் கோரிநிற்பது என்னவென்றால் கடந்தகால வடுக்களையூம் கசப்புணர்வூகளையூம் நினைத்தவர்களாக தற்போதய இந்த நல்லாட்சியில் இடம்பெற இருக்கின்ற சிறுபான்மை மக்களுக்கான தீர்வூத்திட்டம் ஒன்று வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் அவர்களை அவர்கள் ஆழுகின்ற வகையில் அதிகாரமும் அதேபோண்று முஸ்லிம் மக்கள் தங்களைத் தாங்களே ஆழுகின்ற வகையிலும் அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதனையே எதிர்பார்க்கின்றனர்.

1 comment:

  1. எந்தவொரு நிலையிலும் வட கிழக்கு இணைப்பை முஸ்லிம் தலைமைகள் ஏற்றுக்கொண்டு வரலாற்று துரோகத்தை செய்து விட கூடாது. சிங்கள ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் இருக்கும் வரை தான் கௌரவமும், பாதுகாப்பும்.

    ReplyDelete

Powered by Blogger.