யோஷித்தவுக்கு எதிராக, வலுவான ஆதாரங்கள் உள்ளன - ரஞ்சன் ராமநாயக்கா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை விசாரித்துள்ளது. அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
யோஷித்தவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றபடி இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அரசியல் பழிவாங்கல் என்றால் அரசாங்கத்தின் பலம்வாய்ந்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரரும் கைது செய்யப்பட்டிருக்க மாட்டாரே? அப்படியெனில் அவரும் அரசியல் பழிவாங்கலில் கைது செய்யப்பட்டுள்ளாரா?
இந்த அரசாங்கம் சட்டபூர்வமாகவே அனைத்தையும் செய்கின்றது. நட்பு, நெருக்கம் என்பதற்காக சட்டத்தை மீறி எதுவும் செய்வதுமில்லை. பிடிக்காதவர்கள் என்பதற்காக அரசியல் பழிவாங்கல் மேற்கொள்வதுமில்லை.
இதுவே மஹிந்தவின் ஆட்சியாக இருந்திருந்தால் வேறு மாதிரி நடந்திருக்கும். ஆனால் நல்லாட்சி என்பதன் காரணமாகவே யோஷித்த பாதுகாப்பாக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு என்றே ஆரம்பிக்கப்பட்ட அரச தொலைக்காட்சியான நேத்ரா டீவி, கை கட்டி வாய் மூடி பார்த்திருக்க, அதிக வருமானம் ஈட்டக்கூடிய விளையாட்டு நிகழ்ச்சிகளை மட்டும் இவரின் CSN டிவி கவர்ந்து கொண்டதும், விளம்பர அனுசரணை அறவேயற்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் அரச தொலைக்காட்சியின் மீது திணிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
ReplyDelete