Header Ads



"அரசியலமைப்பு மாற்றம், தொடர்பாக விழிப்படைவோம்"

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள்,  கருத்துப் பரிமாறல்கள்  நாட்டின் பல்வேறு மட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே.

பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் மக்களின் கருத்துக்களைத் திரட்டி எமது தேசத்திற்கான புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான சந்தர்ப்பத்தை நாம் முதற் தடவையாகப் பெற்றுள்ளோம். இவ்வரிய சந்தர்ப்பத்தில்  மக்களாகிய நாம் மிகவும் அவதானத்தோடும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டியுள்ளோம்.

1972ஆம், 1978ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இரண்டு குடியரசு யாப்புகளும் இவ்வாறான மக்கள் பங்குபற்றுதல் இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்டன. அன்றிருந்த அரசாங்கங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்  பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்திலேயே புதிய யாப்பினை உருவாக்கிக் கொண்டன. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் மக்கள் பங்குபற்றல் மிகவும் அரிதாகவே காணப்பட்டன.

ஆனால் இம்முறை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் விருப்பத்துடனேயே நிறைவேற்றப்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே இம்முறை வாக்காளர்களாகிய மக்கள் புதிய அரசியலமைப்பு குறித்த தமது ஆதரவை அல்லது எதிர்ப்பை முன்வைக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றுள்ளனர். அதனால் அரசியட் கட்சிகளும் அரசியல் வாதிகளும் தாம் விரும்பியவாறு இம்முறை  அரசியலமைப்பு மாற்றத்தை செய்து விட முடியாது. எனவே வாக்களர்களாகிய மக்கள் விழிப்புணர்வுடனும் அவதானத்துடனும் செயற்பட்டால் மக்கள் நலன் சார்ந்த அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அந்த வகையில் சமூகத்தின் புத்தி ஜீவிகள், மதப் பெரியார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இவ்விடயத்தில் மக்களை வழிநடாத்தும் தார்மீகப் பொறுப்பினையும் கடமையையும் நிறைவேற்ற முன்வரவேண்டும்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பொன்றே இம்முறை எத்ர்பார்க்கப்படுகிறது. இதுவரை மத்திய அரசிடம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் மாகாண அரசுக்கு பகிரப்படப் போகின்றன. தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன, அதனையொட்டிய புதிய தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.

இவ்வாறான மாற்றங்கள் எமது மாவட்டத்தில் அல்லது  மாகாணத்தில் எத்தகைய சமூகப், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றன என்பது குறித்து அந்தந்த மாவட்டத்தில் மாகாணத்தில் உள்ள சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் செயட்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும்.

புதிய அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் என்பது குறித்த கால வரையறைக்குள் செய்யப்படவுள்ளதால் அதற்கேற்றவாறு முனைப்புடன் செயற்படவேண்டிய தேவையுள்ளது.

அந்த வகையில் மாவட்ட, மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய நடவடிக்கைகள்

அ. அரசியமைப்பு மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்
ஆ. அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் தமது மாவட்டத்தில், மாகாணத்தில் எவ்வாறான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனை அடையாளம் காணுதல்.
இ. அதற்கேற்றவாறு தமது மாவட்டம் மாகாணம் சார்ந்த முன்மொழிவுகளை அரசியலப்பு சபைக்கு முன்வைத்தல்.
ஈ. புதிய அரசியலமைப்பிற்கான  வரைபு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் போது நாம் சமர்ப்பித்த முன்மொழிவுகள் எவ்வளவு தூரம் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அவதானித்தல்.
உ. புதிய அரசியலமைப்பில் தமது முன்மொழிவுகளை உள்வங்குவதற்கான அழுத்தங்களை தமது மக்கள் பிரதிநிதிகளுடாக ( பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள்) அரசாங்கத்திட்கு ஏற்படுத்தல்.
ஊ. அவ்வாறு தமது மாவட்ட மாகாண மக்களின் அபிலாஷைகள் எதிர்பார்ப்புகள் புதிய அரசியலமைப்பில் கவனத்திகொள்ளபாடாத விடத்து சர்வஜன வாக்கெடுப்புக்கான பிரச்சாரம் நடைபெறும் போது மேற்படி விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தி சர்வஜென வாக்கெடுப்பில் தமது மாவட்ட மாகாண மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற வழிகாட்டலை மக்களுக்கு வழங்குதல்.

மேற்படி செயற்திட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாகாணத்திலும் உள்ள தன்னார்வ செயற்பாட்டளர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் முன்னெடுக்க முடியும்.

எதிர்வரும் 2015 ஜனவரி 25 ஆம் திகதி திங்கட்கிழமை அரசியலமைப்பு கட்கைக்கான நிறுவனத்துடன் இணைந்து நல்லட்சிக்காண தேசிய முன்னணி கொழும்பில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது. இக்கலந்துரையாடலின் வளவாலர்களாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அரசியலமைப்பு நிபுணர்கள் மூவர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்து பரந்துபட்ட பல்லின மக்கள் வாழும் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பைக் கொண்ட நாடு, அந்த வகையில் அவர்களது அனுபவம் எமக்கான அரசியலமைப்பு முன் மொழிவுகளை தயாரிப்பதற்கு உதவியாக அமையும். 

எனவே இக்கலந்துரையாடலில் பங்கேற்க விரும்புகின்றவர்களும் தொடர்ந்தும் மாவட்ட மாகாண மட்டத்தில் இவ்விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களும் பின்வரும் மின்னஞ்சல் அல்லது கையடக்கத் தொலை பேசியுடன் தொடர்பு கொள்ளவும்.

e mail: nfgglk@gmail.com, mobile: 0773868126

No comments

Powered by Blogger.