Header Ads



வழக்கு தாக்கல், செய்தார் ஹமீட்

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளரின் நியமனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சுபைதீன் அந்த பதவியில் கடமையாற்றுவதற்கு தடைவிதித்து உத்தரவிடுமாறு கோரி, அதன் பொதுச் செயலாளராக இருந்த ஹமீட் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளரை நியமித்தமையானது சட்டவிரோதமானது என்பது கட்சியின் யாப்புக்கு முரணானது.

இதனால், பொதுச் சபைக் கூட்டத்தின் முடிவுகளை இரத்துச் செய்து தடைவிதித்து உத்தரவிடுமாறும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிசார்ட் பதியூதீன், அதன் தேசிய அமைப்பாளர் உட்பட 15 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. iwarukku wera wela illai

    ReplyDelete
  2. சமூகத்திற்காக போராடியிருந்தாலோ வழக்காடியிருந்தாலோ வரவேற்கலாம்.ஒரு தேசியப்பட்டியல் நியமனத்திற்காக அடித்துக்கொள்ளும் செயலாளர்களில் இவரும் ஒருவராகிவிட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.