ஹிருவுக்கு ஹிருணிக்கா சவால், மாமியாரை கவனிக்கும் நல்லாட்சி, களங்கம் என்கிறார் ரஞ்சன்
இலங்கையின் தனியார் வானொலி ஒன்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள சவாலில்,
”குறித்த ஊடகத்தின் உரிமையாளர்களும், அவர்களின் சகோதரர்களும் விரைவில் சட்டப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
தமது face book இல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஹிருனிகா, ஊடக தர்மத்தை மீறி குறித்த ஊடகம் தமது விடயத்தில் வீணான திரிபுகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை தாம் விரைவில் உண்மைக்காக போராடப்போவதாகவும் ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.
2
சிறிசேன- ரணில் அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகளை செய்யும் கொள்கையை பின்பற்றிவருகிறது.
இதன் ஒருகட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவின் மாமியான சுவர்ணா புஸ்பகாந்தி குணரட்ன அமரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். இவர் ஹிருனிக்காவின் தந்தையான பாரத லச்மன் பிரேமசந்திரவின் சகோதரியாவார்.
இது தொடர்பில் கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியுறவு அமைச்சை வினவியபோதும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாம் நியமனக்கடிதத்துக்காக காத்திருப்பதாக சுவர்ணா குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். சுவர்ணாவை பொறுத்தவரை அவர் இதற்கு முன்னர் எந்தவொரு ராஜதந்திர பதவியையும் கொண்டிருக்காத அனுபவமற்றவர் என்று ஊடகம் தெரிவித்துள்ளது.
3
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்ய ஒரு மாத காலம் காத்திருக்க நேரிட்டது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, சட்டத்தை அமுல்படுத்த ஒரு மாதம் காத்திருக்க நேரிட்டுள்ளது. இரண்டு மணித்தியாலங்களில் கைது செய்திருக்க முடியும் அவ்வாறு செய்யாத காரணத்தினால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஹிருனிகாவின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. ஹிருனிகா எனது நல்ல நண்பி. மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்து நாடாளுமன்றில் நாம் இருவரும் இணைந்து குரல் கொடுத்தோம்.
எவ்வளவு நட்பு இருந்தாலும் அவர் குற்றம் இழைத்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஹிருனிகாவை விடவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தை நேசிக்கின்றேன்.
ஹிருனிகா பிழை செய்திருந்தால் அதற்கான தண்டனை விதிக்கப்பட வேண்டும். உயிர்த் தியாகம் செய்து உருவாக்கிய இந்த அரசாங்கத்தை அழிக்க இடமளிக்க முடியாது. ஹிருனிகா போன்ற அனுபவம் குறைந்த அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது பிழையானது.
இது பிழையான முன்னுதாரணமாக அமையக் கூடும் என ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஹிருனிகா கைது செய்யப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ganasara still not arrest for alutgama... mr ranjan do you know this
ReplyDeletewhat about ganasara...... why not arrest
ReplyDeleteNandinaal neraaga nadakka mudiyaazu . Aanaal azu sollumaam
ReplyDeletekunjugalukku neraaga nadakka solli ! Crabs won't walk straight.