வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் தேவை மதிப்பீடு
நல்லாட்சி அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த கிராமங்களை மீண்டும் தமது பழைய இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான செயத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. விரைவில் நடைபெறவுள்ள இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகளின் மகா நாட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவுள்ளது.
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான திட்ட மும்மொழிவை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மீள்குடியேறியுள்ள அல்லது மீள் குடியேற்றப்பட்டு குறைபாடுகளை கொண்டுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கான திட்ட மும்மொழிவை தயாரிப்பதற்காக அக்கிராமங்களின் தற்போதைய தேவைகள் பற்றிய மதிப்பீடு (Needs Assessment) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தயாரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் கிராமங்களின் தலைவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் முபீன் தொலைபேசி இலக்கம் 0777009231 உடன் தொடர்பு கொள்ளுமாறும், வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் கிராமங்களின் தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக் தொலைபேசி இலக்கம் 0773111593 உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஜெம்சாத் இக்பால்
Post a Comment