துரோகிகளுக்கு மரண தண்டனை விதித்த ஹமாஸ்
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் காசாவின் ஹமாஸ் இராணுவ நீதிமன்றம் நான்கு பலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்றத்தின் சுருக்கமான அறிக்கை ஒன்றில், தெற்கு காசாவின் செய்தூன் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் ஒருவருக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த மூவரும் வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் குற்றங்காணப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த நால்வரும் இஸ்ரேலிய படுகொலைகளுக்கு உதவியாக கார் வண்டிகள் மற்றும் வீடுகளை காட்டிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த மரண தண்டனைக்கு முன்னர் காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை நீதிமன்றங்களால் 167 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன மனித உரிமை மையம் குறிப்பிட்டுள்ளது.
பத்தாஹ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காசாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றிய பின் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த பகுதி இஸ்ரேலின் முற்றுகையில் உள்ளது. இந்த காலப்பகுதியில் ஹமாஸ் அமைப்பு காசாவில் 80 மரண தண்டனைகளை விதித்துள்ளது.
பலஸ்தீன சட்டத்தின்படி இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்வது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒரு சமூகத்தின் நலன்கள் பணம்பதவிக்காக பரிபோவதாக இருந்தால் அந்த முலுசமூகமும் மூழ்கடிக்கப்பட்டுவிடும் அவ்வாரு அன்ரு பலஸ்தீனியர்கள் விட்டதவருதான் இன்ருவரைக்கும் மரைமுகமாகவும் தொடர்கின்ரது எலும்புத்துன்டுகலுக்கு நாயாட்டம் அழைந்தால் எதிரியும் அந்த சமூகத்தினரை நாய்கலாகவே கனக்கிலிட்டு தன்பயனத்தை முன்னெடுத்து செல்வான்...இது நமது சமூகத்திற்கும் தலமைகலுக்கும் ஒரு பாடமாக இருக்கவேன்டும்..
ReplyDelete