Header Ads



ஐ.எஸ். தீவிரவாதிகளை புதைப்போம் - அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை புதைப்போம் என்று அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி கூறிஉள்ளார். 

ஆப்கானிஸ்தானில் காலூன்றிஉள்ள ஐ.எஸ். தீவிரவாதம் அரசு மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெறுவது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, “ஐ.எஸ். தீவிரவாதிகளை புதைப்போம்,” என்று கூறிஉள்ளார். ஆப்கானிஸ்தான் பழிவாங்க உள்ளது. அவர்கள் (ஐ.எஸ். தீவிரவாதிகள்) தவறான மக்களை எதிர்க்கொண்டு உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் மிகவும் முக்கியமான அபாயங்களை எதிர்க்கொண்டு வருகிறோம் என்பதில் எந்தஒரு மறுப்பும் கிடையாது.” என்று கூறிஉள்ளார். 

தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்துக் கொண்ட அஷ்ரப் கானி இதனை கூறிஉள்ளார். 

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தனது கிளையை வடிவமைத்து உள்ளது என்று அமெரிக்காவும் கடந்த வாரம் தெரிவித்தது.

முன்னாள் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் தலிபான் தலைவர்களால் இந்த தீவிரவாத அமைப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே தலிபான் தீவிரவாதிகள் உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றுவிட்டது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தானே தீவிரவாதிகளை பேச்சுவார்த்தை மேஜைக்கு அழைத்து வரவேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கூறிஉள்ளது. இப்போது, தலிபான் தீவிரவாதிகள் உடனான பேச்சுவார்த்தையானது வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கப்படவில்லை என்றால் நிலையானது தொடர்ந்து மோசமான நிலையிலே நீடிக்கும். 

தலிபான் தீவிரவாத இயக்கம் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஷ்ரப் கானி கூறிஉள்ளார். 

ஆப்கானிஸ்தான் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய அஷ்ரப் கானி; ”ஐரோப்பிய நாடுகளில் எதிர்காலம் இல்லை என்பதையே அவர்களிடம் சொல்வேன். ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடிவிட்டது. நீங்கள் பிரான்ஸ் பிரதமரிடம் பேட்டி எடுத்தீர்கள், ஒளிபரப்பு செய்தீர்கள். ஆப்கானிஸ்தானில் தான் எதிர்காலம் உள்ளது என்பதை,” என்று கூறிஉள்ளார். 

No comments

Powered by Blogger.