Header Ads



"மாடு அறுப்பதை தடைசெய்ய, முஸ்லிம்களாகிய நாம் ஒத்துழைப்போம்...."

-எம்.கே.எம். சமீம்-

மாடு அறுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிரிசேன அவர்கள் தெரிவித்திருப்பது முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற விடயத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள், இயக்கம் சார்ந்தவர்கள், கல்விமான்கள், மற்றும் தனிப்பட்டவர்களின் கருத்துக்களை இணையதளங்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள் மூலமாகவும் அறியமுடிகின்றது.

தற்போதைய ஜனாதிபதியின் கருத்தைப் போன்று சில வருடங்களுக்கு முன்னரும் பொதுபல சேனா அமைப்பினரது கருத்தும் தெரிவிக்கப்பட்ட போதும் இதே கொந்தளிப்பு முஸ்லிம்களிடம் காணப்பட்டது.
ஆனால் இந்த கருத்தை எதிர்த்து சுமார் 8 வீதமான முஸ்லிம்களாகிய நாங்கள் மாத்திரமே கோஷமிடுகின்றோமே தவிர மாட்டிறைச்சியை உண்ணுகின்ற, விற்பனைக்காக வளர்க்கின்ற அன்னிய சமூகத்தினர் இது பற்றி எந்த கவலையும்படுவதில்லை.

இதன் விபரீதம்:

01.    முஸ்லீம்களாகிய எங்கள் மீது அந்நியர்களின் குரோதத்தையும் வெறுப்புணர்சியையும் மென்மேலும் உண்டுபண்னும், உண்டுபண்ணியதையும் பல இடங்களில் நாம் பார்க்க முடிகின்றது.

02.    பொதுபல சேனா கோஷமிட்டபோது மாட்டிறைச்சியின் (1kg) விலை ரூபா. 380.00 தற்போதைய விலை ரூபா. 580.00.

03.    ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிர்ப்புதெரிவித்து நாம் வெற்றிபெறுவோமாயின் மாட்டிறைச்சியின் விலை ரூபா. 1000 ஆகலாம். உழ்ஹியா கொடுப்பவர்கள் கூட குறைந்து விடலாம்.

04.    முன்னைய காலங்களில் உழ்ஹியாவுக்காக பல ஏழை முஸ்லிம்கள் ரூபா. 5000 பங்குகளில் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் இந்த முறை பலர் உழ்ஹியாவும் கொடுக்க வில்லை. காரணம் மாட்டின் விலைக்கு ஒட்டகத்தை வாங்கியே உழ்ஹியா கொடுக்கலாம்.

இது போன்று எமக்குத் தெரியாத பல விளைவுகள் இருக்கும். நாம் இதற்கான போராட்டங்களைத் தொடர்வோமேயானால் மென்மேலும் இதன் பின் விளைவுளை சந்திக்க நேரிடலாம். அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் மாடு அறுப்பதை நிறுத்த அறிக்கைகளிட்டு, ஆர்ப்பாட்டங்கள் செய்வதை விட்டுவிட்டு நாங்களே அதற்கு அனுமதியழிப்போமேயானால் அதனுடைய விளைவுகளாவன,

•    மாட்டின் பெருக்கம்,
•    மாட்டுக்கு உணவு, நீர் தட்டுப்பாடு,
•    போக்கு வரத்து இடைஞ்சள்,
•    மாட்டு வியாபாரிகளின் குமுரல்,
•    இறைச்சி இறக்குமதியின் போது ஏற்படும் சிக்கல்கள்,
•    இறைச்சிக் கடைகள் மூலமாக அரசு இழக்கும் வருமானம்,

போன்ற பல விடயங்களை நாம் இது வரை காலம் அறிக்கையிட்டு, கோஷமிட்டும் காதுக்கு எட்டாதவர்களுக்கு சில மாதங்களிலே செயல் ரீதியாக நிரூபித்துக் காட்ட இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

முஸ்லிம்களாகிய நாங்கள் மாடு அறுப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது முக்கியமாக உழ்ஹியா தடைப்பட்டு விடும் என்பதே. இதை நாங்களே நிறுத்தினால் ஒர் இரு வருடங்களில் மாட்டிறைச்சியின் விலை ரூபா. 100 க்கு வரும். ஏழு நபர்கள் சேர்ந்து உழ்ஹியா கொடுப்பது தடைப்பட்டு ஒவ்வொருவரும்; ஒரு மாடு கொடுக்கும் காலம் வரும். இன்ஷh அல்லாஹ்.

எனவே போராட்டங்களைக் கைவிட்டு பொறுமையாக இருப்போமேயானால் அல்லாஹ் நம் மீது வெற்றியைத் தருவான்.           

28 comments:

  1. Very rational thinking.

    ReplyDelete
  2. இது பற்றி சிந்திக்க தெரியவில்லையா?
    சிந்திக்க மறுக்கிறோம்.
    இனவாதிகள் நாமே.

    ReplyDelete
  3. Above article is 100% true, but most of our Muslims people don't understand this, instead they tend to think and expose themselves eating beef is compulsory, as if 'Farlu kifaya. My dear Muslim Umma please wake up before it's too late.

    ReplyDelete
  4. If the slaughtering is not allowed how do you perform Ulhiyya even if the price of the cattle is Rs 100.

    ReplyDelete
  5. இது ஒரளவு நடைமுறைச் சாத்தியமான தீர்வாகத்தான் படுகின்றது. எதிர்த்து நின்று உருப்படியான வெற்றியும் பெறாமல் மனவிரக்தியடைவதைவிட சார்ந்து ஒத்துழைத்து அதன் மூலமாகவே அவர்களை தோற்கடிப்பது விவேகமானது.

    ReplyDelete
  6. As a Muslim, I agree 100% with Maithri. Slaughtering of cows should be banned immediately but Muslims or other's rituals should be allowed during certain times of the year.

    The reasons for banning beef:-

    Muslims 9% in Sri Lanka. So we all eat meat. so it is 9%.

    Buddhist - 70% in Sri Lanka. Say,quarter of them eat beef. (it is actually half of them) so 70/4 = 17.5%

    now take Christians 7% say, they all eat, so it is = 7%

    Hindus - 14%, say half of them eat, so it is 7%

    Now see who is eating more? 17.5% Buddhist

    Again many non-Muslims are eating beef than Muslims (17.5% + 7% +7%) = 31.7%

    I am not pretty good at math..

    ReplyDelete
  7. Alhamdulillah
    I really appreciate the article and the comments.
    It's a must on behalf of the whole Muslim community the parliamentarians irrespective of their parties should initiate to bring the legal ordinance in the parliament.
    Further all the local bodies which are dominated by Muslims should bring this issue in their local bodies.
    In sha Allah it will be a blessing for us and our future generations
    Wait and we will be begged by these unruly elements when the after effect of these types of actions are felt in the country in 5 or more years.

    ReplyDelete
  8. Well said. But in the future prob for us bcz if no one will consume meat as u said above will happen but there after Govnt will promote meat exporters like in india.so who will get benefits if we give up this?? Think!. So if we give up this it won't harm them so we should think about it.

    ReplyDelete
  9. Well said. But in the future prob for us bcz if no one will consume meat as u said above will happen but there after Govnt will promote meat exporters like in india.so who will get benefits if we give up this?? Think!. So if we give up this it won't harm them so we should think about it.

    ReplyDelete
  10. விலைப்பட்டியல் மாட்டிரைச்சி- கோழி-மீன்-இன்னோரன்ன அனைத்திலுமே அதிகரித்துகானப்படுகின்ரன ஒரு காலத்தில் கோல்டன் மீனை வாங்கவெட்கப்படுவார்கள் ஆனால் இப்போ அதன் மவுசு சொல்லவே தேவையில்லை இவைகள் ஓருபுரம் இருக்கட்டுமே கட்டுரையாலர் மாட்டின் விடயங்கள் கூருவதுபோல் மூவினமும் சேர்ந்து மதுக்கடைகலை மூடச்சொல்லி போராட்டங்கள் எடுத்தால் அது எவ்வழவு சிறந்ததாக இருக்கும் மூக்கு முட்ட குடித்து முலுமாட்டையும் உன்டு குப்புரபடுத்து காலையில் எழுந்து வேதவாக்கு ஓதும் விவஸ்தையில்லா கூட்டத்தின் எதிர்ப்பலைகள் இதைவிடமோசமாக இருக்கும் முயட்சித்துபாருங்கள்.....

    ReplyDelete
  11. My thoughts reflected in your article. In other words, I have the same ideas of yours to plaster the charcoal on their faces ( policy Makers as well as implementors). Please my brothers and sisters of Islamic brush up your minds to freshly come up with new energy to beat the opponents.

    ReplyDelete
  12. My thoughts reflected in your article. In other words, I have the same ideas of yours to plaster the charcoal on their faces ( Policy Makers as well as Implementors ). Please my dear brothers and sisters of Islamic brush up your minds to freshly come up with new energy to beat the opponents on their way. Think about the alternative ways if one door shuts.

    ReplyDelete
  13. A day about 5000 cow killed for beef in sri lanka. If they stop killing cow will be extra one millions in a year. Within 5 year thay will give order to military to kill cows same like Australia ordered to kill camel by there military.

    ReplyDelete
  14. My thoughts reflected in your article. In other words, I have the same ideas of yours to plaster the charcoal on their faces ( policy Makers as well as implementors). Please my dear brothers and sisters of Islamic brush up your minds to freshly come up with new energy to beat the opponents on their ways. Please find the perfect alternative ways when one door shuts.

    ReplyDelete
  15. Thanippatta manizanin shontha karuththai pirashurikka wendam

    ReplyDelete
  16. I agree with him, and same time we should be boycott imported beef also.

    ReplyDelete
  17. This is the time to stay against alcohol also. Because alcohol is the major problem in every socity, if they can to block beef for some people why they can't block alcohol ????

    ReplyDelete
  18. சிறந்த கருத்து

    ReplyDelete
  19. Assalamu Alaikum Warahmathullah,

    i believe this is rational thinking and the brothers and sisters who ever commented must be appreciate.

    let’s try to help them on what they want. There are some lessons cannot be learn unless we experiment it and feel it. if we support them to ban Slaughtering, they will feel and understand the consequences not later then two or three years.

    i believe we have nothing to worry about Ulhiyya, Allah will not blame us for this. We are counted on our Niyyah. if any of us including me, prevented from performing Ulhiyya, we can think alternative best way, i am just trying to count on the amount spent in my village where i live..

    Average Slaughtering per year on Ulhiyya = 60 Cows
    Average price per Kg = LKR 650/= ( approximatly )
    Average weight of the Cow = 75
    Average cost per cow = LKR 48750/=
    Total Cost per Ulhiyya = LKR 2,925,000/=

    the cost is 2.9 Million Rupees only in my village. this is real case.

    lets assume, same case may apply for 100 villages island wide ( i am pretty sure, this could be more then 200 but for some worst case calculation i am assuming as 100 )

    2.9 Million x 100 = 290 Million Rupees per Year we have Cash for Ulhiyya

    if this is the case for three years, then we will have 870 Million Rupees in cash.

    Imagine 890 Million rupees in three years.

    if we spend this money in to our society on their education , health and social welfare, can you imagine what will be the outcome??

    subahanallah, that will be amazing!!!

    we can help our Muslims, we can build our society, increase level of education, level producing better results, better university entrance, produce more doctors, engineers, professionals and make better future our children in sha allah.

    its nice to dream even.

    ReplyDelete
  20. சமீம் அவர்களே, ஒரு பொது பிரச்சினையில் உங்கள் நேர காலத்தை செலவிட்டு இந்த கருத்தை தெரிவித்ததற்கு முதலில் நன்றி. ஆனால் நீங்கள் கூறும் ஒரு பக்கத்துக்கு மறுபக்கமும் உள்ளது.

    1. ஒருவரது ( சமூகத்தினது ) கருத்தையும் உணர்வுகளையும் தெரியப்படுத்துவது ( உரிய நேரத்தில் உரிய இடத்தில் ) உரிமை ( கடமை). பிறரின் வெறுப்புக்கு ஒருவரது ( சமூகத்தினது) உரிமையை விட்டுக்கொடுக்க முடியுமா????. இந்த மாடறுக்கும் பிரச்சினையை பொது நலன் சார்ந்த ( உணவு, பொருளாதாரம், உணவு சங்கிலி, சுகாதாரம், தனிமனித சுதந்திரம் போன்ற இன்னோரன்ன ) நமது நாட்டின் நலன் சார்ந்த பிரச்சினையாக, மதங்களையும் தாண்டி( பிற மதத்தவர்களையும் சுய சிந்தனை வாதிகளையும் இதன் பால் ஈர்பதட்கு ) ஏன் முன்னெடுக்க முடியாது.

    2. பொதுபல செனவுக்கும், மாட்டு இறைச்சி விலை கூடியதுக்கும் என்ன காரணம் என புரியவில்லை. அப்படி பார்த்தல் குறைய வேண்டும் அல்லாவா?

    3, 4. வசதி படைத்தவர்களின் விடயம்.

    Ilma Abdul Gaffoor இக்கும், Fathima Shilhara இக்கும் உங்கள் பதில் என்ன? ( Thank you very much both of them)

    இந்த நாடு நமது நாடு. இந்த நாட்டின் நலனில் ( அனைத்து இன மக்களின் நல்வாழ்வில் ) எமக்கு அக்கறை உண்டு. எனவே நீங்கள் கூறியவாறு நாடு ஒரு பிரச்சினையை நோக்கி செல்கிறது என்றால் அதை சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமை. அதிலும் நாம் முஸ்லிம்கள் முனாபிக் தனமாக நமது காரியங்களை சாதிக்க முட்படலாமா??

    Al Visath இன் மதுக் கடை ஆலோசனைக்கு எமது நன்றிகள்.

    ஆரோக்கியமான கலந்துரையாடல் மூலமும் பெரும் பான்மை மக்களை நாடு நலன் சார்ந்த உனர்வூட்டல் மூலமாகவும் சேர்த்துக் கொண்டு இந்த விடயத்தை கையாள்வது தான் சிறந்தது என்பது எமது பணிவானான கருத்தாகும்.

    ReplyDelete
  21. மாடறுப்பை தடை செய்தல் என்ற கோஷம் முதன்முதலில் அநகாரிக்க தர்ம்பால என்ற "இலுமினாட்டி" கிறிஸ்தவனாய் இருந்து பௌத்தனாய் மதம்மாறி 1900 களில் ஞான சாரவின. முன்னோடியாய் சிங்கள மக்களின் உள்ளங்களில் நஞ்சை விதைத்தான்,அதன் விளைவாய் 1915 சிங் கள முஸ்லிம் களவரம் முஸ்லும்களிற்கு பாரிய பொருற்சேத்த்தை உண்டுபன்னியது,
    வெறுமனே இது சின்னப் பிரச்சனை அல ல மாறாக இது ஒரு உரிமை மறுப்பு ,பொருளாதார அபகரிப்பு,
    இதை நாம் ஜன தாயகரீதியில் போராட வேண டியது நம் கடைமை

    ReplyDelete
  22. Dear Brothers
    I still not understand why we are making a very issue out of nothing? Banning beef - did the government mad it a law in the parliament? No - it is just a political statement by a politician. Let us not waste our valuable time on this. If the government ban beef then the whole country will be the bigger looser and not just the muslim society. There is absolutely no necessity to make hue and cry for this.
    There is a bigger issue - the government is working to re-write the constitution. Is anyone in our society giving importance to this? Why we are not talking about it? The constitution is going to change the fate of us. Our existence and our rights are going to be bigger questions in the new constitution and not the beef.
    In my opinion the beef issue is a conspiracy to divert the muslim's attention and thinking away from the constitution. We will be keep talking of the beef issue while government complete the new constitution.
    My humble request is simply ignore the beef issue and concentrate on the new constitution please.
    Please remember - if you can't slaughter a cow for Ulhiya, there will be options in Islam to donate the money to the needy. But if Muslims failed to address their concerns in the new constitution, we will be the looser forever.

    ReplyDelete
  23. I 100% agree with Mr. Sameem. Why don't our people understand the truth? Those who get money from Arab countries for ulhiya, will oppose this for money. It would be much better if such people keep quiet for the betterment of our society.

    ReplyDelete
  24. அதனாலென்ன. கண்டிப்பாக செய்ய வேண்டும்

    நல்ல விடயம். இதன் விளைவு, அவர்களே மாடு அறுக்கச் சொல்லி அதற்குச் சட்டமும் இயற்றுவார்கள்.

    ReplyDelete
  25. I have been commenting for the past few days on this but could not put across what I was trying to say.
    Thank you Writer Shameem and Ahamed Zaid - Bawa You both have explained it beyond 100% in understandable language.
    Further Over to You Hon Minister of Muslim Cultural Affairs.I predicted this situation once we met at a wedding reception when you were in the 100 day Gvmt.

    ReplyDelete
  26. I do agree with the Writer as well as Mr Bawa. We need to think and talk about Constitution in a broad manner.

    ReplyDelete

Powered by Blogger.