Header Ads



பூஜித் ஜயசுந்தரவுக்கு, பீக்கொக் மாளிகையை தோண்டும் பொறுப்பு..?

பீக்கொக் மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்கட்சி தலைவரும் வர்த்தகருமான ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள பீக்கொக் மாளிகையில் இருக்கும் நீச்சல் தடாகத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவுள்ளன.

இது சம்பந்தமாக விசாரணை நடத்தி எதிர்வரும் 1 ஆம் திகதிக்கு அறிக்கை சமர்பிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமான விசாரணைகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தூதுவராகவும் பணியாற்றியுள்ள லியனகே, தனது பீக்கொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தார்.

வாஸ்து சாஸ்த்திர ஆலோசனையின் படி மகிந்த ராஜபக்ச, நீச்சல் தடாகத்தை மணல் இட்டு நிரப்பியிருந்தார்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச அந்த மாளிகையில் குடியேறும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

No comments

Powered by Blogger.